நான் பிக் பாஸ் 5க்கு போனும்னா இந்த ரெண்டு பேர் என் கூட அனுப்புங்க – Kpy ராமர். (இவங்க போனா வேற லெவல்ல இருக்குமே)

0
1725
ramar
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு கூட பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்ற செய்திகள் கூட வெளியானது. ஆனால், அதனை முற்றிலும் மறுத்தது எண்டிமால் நிறுவனம். இப்படி ஒரு நிலையில் அடுத்த சீசன் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தள்ளது. ஆனால், அடுத்த சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக இருகிறது என்று கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : மோடி பத்தி குற சொல்லி டைம் வேஸ்ட் பண்ணாத – அட்வைஸ் செய்த காயத்ரி ரகுராமை Block செய்த சித்தார்த். அதற்கு அவரின் பதிலை பாருங்க.

- Advertisement -

பிக் பாஸின் ஐந்தாவது சீசன் வரும் ஜூன் மாதம் துவங்க இருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளும் துவங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சீஸனின் குக்கு வித் கோமாளி கனி, சுனிதா, தர்ஷா போன்றவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. அதே போல மன்சூர் அலி கான் கூட இந்த சீசனில் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி நிலையில் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்வது பற்றி KPY புகழ் ராமர் கூறியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராமரிடம், பிக் பாஸ் 5வில் கலந்துகொள்வீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதுகுறித்து பேசிய அவர், இது நிஜமா மக்கள் எதிர்பார்க்குறாங்களா இல்லை நீங்களா கேட்குறீங்களா? நான் போறன்னா இல்லையான்னு தெரில. ஆனா நான் அந்த வீட்டுக்குள்ள போனா பழைய ஜோக்கு தங்கதுரையும் பிரியங்காவும் என்கூட இருக்கணும். இருந்தா வீடே ரெண்டா போற அளவுக்கு எங்களோட அழிச்சாட்டியம் இருக்கும் என்று கூறியுள்ளார் ராமர்.

-விளம்பரம்-
Advertisement