அப்பா சென்டிமென்டும்,தங்கச்சி சென்டிமென்டும் எரிச்சலாகுது – புகழை விமர்சிக்கும் CWC ரசிகர்கள்.

0
473
pugazh
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது.

-விளம்பரம்-

அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. மூன்று சீசன்கள் வெற்றிகரமாக மக்களின் பேராதரவை பெற்றதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்ப தொடங்கி விட்டனர்.

- Advertisement -

கடந்த சீசன் போல இல்லாமல் இந்த சீசன் பல புதிய கோமாளிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். ஏனெற்றால் கடந்த குக் வித் கோமாளி சீசன் 3 மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்ததை அடுத்து அதில் இருந்த புகழ், KPY பாலா, சிவாங்கி போன்றவர்கள் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருவதினால் அவர்களுக்கு பதிலாக ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், சின்னத்திரை நடிகையான ரவீனா தாகா, சுனிதா, மோனிஷா, மணிமேகலை உள்ளிட்டோர் புதிய கோமாளிகளாக கலந்து கொண்டுள்ளனர்.

அதிலும் மூன்று சீசன்களாக கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த சீசனில் குக்காக ப்ரொமோட் ஆகி இருக்கிறார். இந்த சீசனில் புகழ், குரேஷி, மணிமேகலை, சுனிதா என்று ஒரு சில முன்னாள் கோமாளிகள் மட்டுமே இருக்கின்றனர். ஆனால், கடந்த மூன்று சீசன்களை விட இந்த சீசன் பார்வையாளர்களை கவரவில்லை. அதிலும் புகழின் காமெடிகள் பார்வையாளர்களை கொஞ்சம் சலிப்படைய செய்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீசனில் புகழிக்கு ஆரம்பத்தில் இருந்தே நெட்டிசன்களின் விமர்சனங்கள் வரத்துவங்கிவிட்டது. அந்த வகையில் சமூக வலைதளத்தில் புகழ் குறித்த ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அதில் ‘ஓவர் ஆக்டிங், தாமுவுடன் எரிச்சல் ஏற்றும் அப்பா செண்டிமெண்ட், சிவாங்கியுடன் சிஸ்டர் செண்டிமெண்ட். கண்டன்ட் குடுக்கிறேன்ற பேர்ல பரபரப்பா சமையல் பன்னிட்டு இருக்க பெண் போட்டியாளர்கள்கிட்ட போய் தொட்டு தொட்டு பேசி தொந்தரவு பண்றது.

டேஸ்ட்டிங் நேரத்துல முன்னாடி போய் நின்னுட்டு காமெடி பண்றன்ற பேர்ல தேவ இல்லாம ஏதாவது பண்றது. குக்கு வித் கோமாளி 1&2 ஹிட்க்கு இவன் ஒரு காரணம்.ஆனா இந்த சீசன் பிளாப் ஆனா அதுக்கும் ஒரு முக்கிய காரணம் இவனா தான் இருப்பான்.’ என்று கூறியுள்ளனர். இது ஒரு புறம் இருக்க பிரபல விமர்சகர் பிரசாத்தும் குக்கு வித் கோமாளி ப்ரோமோவை பார்த்துவிட்டு கஷ்டப்பட்டு காமெடி செய்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement