நல்ல துணி இருக்காது, பாத் ரூம் இருக்காது – புகழிடம் தன் கஷ்டத்தைப் பகிர்ந்துக் கொண்ட நடராஜன். வைரலாகும் வீடியோ இதோ.

0
383
natarajan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் உடன் செலவழித்த நேரத்தை வீடியோவாக எடுத்து புகழ் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் புகழ். இவர் கடலூரை சேர்ந்தவர். வெறும் ஐநூறு ரூபாயை வைத்துக் இவர் சென்னைக்கு வேலை தேடி வந்தார். முதலில் மெக்கானிக் கடையில் வேலை செய்த இவர் தொடர்ந்து பல கடையில் வேலை செய்து இருக்கிறார். பிறகு 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன் முதலாக புகழ் கலந்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. அந்த வகையில் பலரையும் மகிழ்வித்து தனெக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்து இருப்பவர் புகழ். கடந்த இரண்டு சீசன்களிலும் புகழுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் சபாபதி என்ற படத்தின் மூலம் தான் வெள்ளித்திரையில் பிரபலமானார்.

- Advertisement -

புகழ் நடித்த படங்கள்:

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அஸ்வின் நடிப்பில் வெளிவந்த என்ன சொல்ல போகிறாய் படத்தில் புகழ் நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் ஹரிஹரன் இயக்கி இருக்கிறார். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து புகழ் சமீபத்தில் அஜித்தின் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்திலும் ஒரு காட்சியில் நடித்து இருப்பார். இது மட்டுமில்லாமல் அருண் விஜயின் யானை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற பல படங்களில் புகழ் நடித்து முடித்து உள்ளார்.

புகழ் நடிக்கும் புது படம்:

இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி புகழ் பங்கு பெற்று வருகிறார். தற்போது புகழ் ஹீரோவாக கமிட் ஒரு இருக்கிறார். அந்த படத்தின் போஸ்டரை குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் வெளியிட்டு இருக்கிறார். மேலும், அந்த படத்திற்கு Mr Zoo Keeper என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் மார்ச் 20ஆம் தேதி ஊட்டியில் தொடங்கி இருக்கிறது. அதனை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

-விளம்பரம்-

புகழ் பதிவிட்ட வீடியோ:

இதற்கிடையில் கிரிக்கெட் பிரபலம் நடராஜனை புகழ் சமீபத்தில் சந்தித்திருக்கிறார். மேலும், நடராஜன் வீட்டில் புகழுக்கு செமத்தியான கறி விருந்து வைத்திருக்கிறார்கள். இதுதொடர்பான வீடியோவை புகழ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது பரட்டை புகழ் யூ-ட்யூப் சேனலில் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் புகழ், ரொம்ப நாளாவே நம்ம நட்ராஜ் உங்கள பாக்கணும் அண்ணா. கண்டிப்பா பாக்கணும்னு கேட்டுட்டே இருந்தார். அவர் வீட்டுக்கு போயிட்டு இருக்கோம் என்றார். அதற்குப் பிறகு நடராஜ் கூறியிருப்பது, எங்கப்பா தங்கராசு, அம்மா சாந்தா, எனக்கு மூன்று தங்கைகள், ஒரு தம்பி. எனக்கு நிறைய தடைகள் வந்தது.

நடராஜின் குடும்ப சூழ்நிலை:

இங்கே இருந்து போறதுக்கு பஸ் கிடையாது. போட்டுக்க நல்ல துணி இருக்காது. முக்கியமாக பாத்ரூம் இருக்காது என்று உருக்கமாக நடராஜ் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். அது மட்டும் இல்லாமல் நடராஜ் அவர்கள் சர்வதேச அளவில் விளையாடினாலும் உள்ளூரில் இருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு தன் சொந்த முயற்சியில் கிரிக்கெட் கிரவுண்ட் ஒன்றை தயார் செய்து வருகிறார் என்றும் கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பாராட்டும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement