காரை சுற்றி சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் கூட்டம் – ஸ்தம்பித்து போன புகழ். என்ன செய்துள்ளார் பாருங்க

0
1086
pugal
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு நிறைவடைந்த குக்கூ வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் சென்று கொண்டு இருக்கிறது. இந்த இரண்டு சீசனும் வெற்றி பெற முக்கிய காரணம் நிகழ்ச்சியில் இருக்கும் கோமாளிகள் தான். இவர்கள் செய்யும் கோமாளித்தனத்திற்கு அளவே இல்லை. அதோடு இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதற்கு முக்கிய காரணம் புகழ். மேலும், இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்க்கின்ற ஒரு கும்பலும் சோசியல் மீடியாவில் உள்ளது. தற்போது குக் வித் கோமாளியின் செலிபிரிட்டி ஆக சோசியல் மீடியாவில் பரவியிருப்பது நம்ம புகழ் தான்.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்க்கின்ற ஒரு கும்பலும் சோசியல் மீடியாவில் உள்ளது. குக் வித் கோமாளி-யின் நாயகன் என்று சொல்லுமளவுக்கு காமெடி மழை பொழிந்து தள்ளுகிறார் புகழ். கடலூரை சேர்ந்த இவர் வெறும் ஐநூறு ரூபாயை வைத்துக்கொண்டு 2008ம் ஆண்டு சென்னைக்கு வேலை தேடி வந்திருக்கிறார் அப்போது இவரை வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி இருக்கிறார்கள் அதன் பின்னர் இவர் மேக்கானிக் கடையில் வேலை செய்து இருக்கிறார் பின்னர் வாட்டர் வாஷ் கடையில் கூட வேலை செய்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : எனக்கும் சம்யுக்தாவுக்கு என்ன உறவு ? முதன் முறையாக உண்மையை கூறிய பாவனா.

- Advertisement -

அந்த சமயத்தில் இவருக்கு பானா காத்தாடி படத்தில் நடித்த உதயராஜ் உடன் நட்பு ஏற்பட்டு இருக்கிறது. அதன் பின்னர் கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். செட்டில் அனைவரிடமும் இவர் கலகலப்பாக பேசுவார் அதன்மூலம் இவருக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. அப்படியே அது இது எது, சிரிச்சா போச்சு என்று பல நிகழ்ச்சி மூலம் தனது வித்தியாசமான கெட்டப்புகளில் போட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் புகழ்.

சமீபத்தில் கூட முதல் முதலாக கார் ஒன்றை வாங்கி இருந்த புகழ், என் பரம்பரையிலேயே முதல் கார் இதான் என்று நெகிழ்ச்சியாக கூறி இருந்தார். சமீபத்தில் வாங்கியுள்ள காரில் சென்ற போது ரசிகர்கள் அவரை சுற்றி சூழ்ந்து கொண்டுள்ளனர். ரசிகர்களின் அன்பால் ஸ்தம்பித்து போன புகழ், அங்கிருந்து காரில் கையசைத்த படியே கிளம்பியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement