எனக்கும் சம்யுக்தாவுக்கு என்ன உறவு ? முதன் முறையாக உண்மையை கூறிய பாவனா.

0
1734
bhavana
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். சம்யுக்தா, பிரபல விஜய்டிவி தொகுப்பாளினியாக பாவனாவிற்கு மிகவும் நெருக்கமானார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. இவரும் சம்யுக்தாவும் இணைந்து நடனமாடி பல வீடியோகளை போட்டுள்ளார்கள்.ஆனால், சம்யுக்தா இது நாள் வரை, தனக்கு பாவனாவை தெரியும் என்று எங்கேயும் சொன்னதும் கிடையாது. சம்யுக்தா கடந்த வாரம் நாமினேஷனில் வந்த போது கூட பாவனா, சம்யுக்தாவிற்கு வாக்களிக்குமாறு ட்வீட் செய்து இருந்தார்.

- Advertisement -

பலரும் பாவனா, சம்யுக்தாவின் சகோதரி என்று கூட கூறி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பாவனா மற்றும் சம்யுக்தா இருவரும் இணைந்து புகைப்படங்களை பதிவிட்டனர். இப்படி ஒரு நிலையில் பாவனா, சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேளிவிகளுக்கு பதில் அளித்தார் அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் சம்யுக்தாவின் சகோதரியா என்று கேட்டதற்கு, ரத்த உறவு இல்லை, அவர் இன்னொரு அம்மா மூலமாக எனக்கு கிடைத்த சகோதரி என்று கூறியுள்ளார்.

வீடியோவில் 11:44 நிமிடத்தில் பார்க்கவும்

இது ஒருபுறம் இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் லைவ் வீடியோவில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்த சம்யுக்தா, பாவனா குறித்து கூறுகையில் ‘பாவனா என்னுடைய சகோதரி கிடையாது அவர் என்னுடைய ஸ்கூல் சீனியர் மேலும் நாங்கள் இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள். மும்பையில் இருக்கும் பாவனாவின் உறவினர்கள் தற்போது கொரோனா பிரச்சினை காரணமாக என்னுடைய வீட்டில் தான் தங்கி வருகிறார்கள். எனக்கு நன்றாக தெரியும் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement