‘இதை எழுதும் போதே என் கண்கள் கலங்குகிறது’ – வடிவேல் பாலாஜியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் புகழ் பதிவிட்ட உருக்கமான பதிவு.

0
373
Pugazh
- Advertisement -

கடந்த 2020 ஆம் ஆண்டு மேடை கலைஞரும் காமெடி நடிகருமான வடிவேலு பாலாஜி இறந்த சம்பவம் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது கலக்கப்போவது யாரு கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் காமெடியனாக தோன்றி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் வடிவேலு பாலாஜி. . வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இவரது தனித்துவமே வடிவேலு ஸ்லாங்கும் அவரது பாடி லாங்குவேஜும் தான். வடிவேலு திரைப்படத்தில் பேசிய வசனங்கள் தான். வடிவேலுவை போல மிமிக்ரி செய்யும் மேடை கலைஞர்கள் ‘வேணா… வலிக்கிது, அழுதுருவேன் என்ற ஒரே வசனத்தை பேசி போர் அடிக்க வைத்த நிலையில் வடிவேல் பாலாஜி நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேலுவின் அத்தனை மாடுலேஷனிலும் நடித்து அசத்தி இருந்தார்.

- Advertisement -

கதறி அழுத புகழ் :

இவரது பிரிவால் விஜய் டிவி விஜய் டிவி பிரபலங்கள் பலரையும் பாதித்தது., வடிவேலு பாலாஜியின் இறுதி அஞ்சலியில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். Kpy புகழ், பாலாஜியின் உடலை பார்த்து. அதிலும் புகழ் ‘எந்திரி மாமா வா போலாம். நீ தான எனக்கு அம்மா அப்பாவா இருந்த இனி எனக்கு யார் இருக்கா மாமா’ என்று கதறி அழுது இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் புகழுக்கு திருமணம் நடைபெற்றது.

பாலாஜியின் திருமண நாளில் புகழ் வேண்டிய விஷயம் :

இந்த நிலையில் வடிவேல் பாலாஜியின் திருமண நாளில் புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவரது வீட்டில் இருக்கும் வடிவேல் பாலாஜியின் புகைப்படத்திற்கு முன் ஆசீவர்வாதம் வாங்கும் புகழ் ‘இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மாமா…உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்துல அடுத்த கட்டத்துல அடியெடுத்து வைக்கிறேன். .

-விளம்பரம்-

ரசிகர்கள் வைத்த கோரிக்கை :

உங்க ஆசிர்வாதம் எப்பவும் எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும்னு நம்பறேன்.எப்பவும் என் கூட தான் இருப்பீங்க, கண்டிப்பா நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்னு அந்த கடவுள வேண்டிக்கிறேன் மாமா’ என்று புகழின் இந்த பழசை மறக்காத பண்பை பலரும் பாராட்டி வந்தாலும் ஒரு சிலர் வடிவேல் பாலாஜியின் குடும்பத்திற்கு உதவி செய்யுமாறு பதிவிட்டு வந்தனர். அதற்கு முக்கிய காரணமே வடிவேல் பாலாஜி மனைவி பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படுவதாகவும் சாப்பாட்டிற்கே திண்டாடுவதாகவும் வடிவேல் பாலாஜியின் மனைவி மேலும் குடும்பத்தை நடத்துவதற்காக வெளியில் வேலை தேடிக் கொண்டிருப்பதாகவும் அவர்களது அக்கம்பக்கத்தினர் கூறி இருந்தனர்.

இப்படி ஒரு நிலையில் இன்று வடிவேல் பாலாஜியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் புகழ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் ‘நீ எங்களுடன் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதும் நீ இல்லை என்று நினைக்க முடியவில்லை. எப்பவுமே எங்களுடன் நீ இருப்பது போலவே இருக்கிறது மாமா. என் வாழ்க்கைக்கு வழிகாட்டிய நீ, முக்கிய தருணங்களில் இல்லாமல் போய்விட்டாயே… இதை எழுதும் போதே என் கண்கள் கலங்குகிறது, மிஸ் யூ மாமா’ என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் வடிவேல் பாலாஜியின் குடும்பத்திற்கு உதவி செய்யுமாறு பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement