திருமணமாகி ஓராண்டு கழித்து குட் நியூஸ் சொன்ன புகழ் – மனைவியுடன் அவரே வெளியிட்ட அழகிய புகைப்படம்.

0
808
- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் புகழ். இவர் கடலூரை சேர்ந்தவர். வெறும் ஐநூறு ரூபாயை வைத்துக்கொண்டு சென்னைக்கு வேலை தேடி வந்தார். முதலில் மெக்கானிக் கடையில் வேலை செய்த இவர் தொடர்ந்து பல கடையில் வேலை செய்து இருக்கிறார். பிறகு 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன் முதலாக புகழ் கலந்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் பலரையும் மகிழ்வித்து தனெக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்து இருப்பவர் புகழ். கடந்த இரண்டு சீசன்களிலும் புகழுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் சபாபதி என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.அதனைத் தொடர்ந்து அஸ்வின் நடிப்பில் வெளிவந்த என்ன சொல்ல போகிறாய், அஜித்தின் வலிமை போன்ற படங்களில் புகழ் நடித்திருந்தார்.

- Advertisement -

படங்களில் கலக்கும் புகழ் :

இதனைத் தொடர்ந்து புகழ் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இறுதியாகஅருண் விஜயின் யானை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற பல படங்களில் புகழ் நடித்து இருந்தார் புகழ். மேலும், இவர் ஜூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் அடிக்கடி விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் புகழ்.

புகழின் காதலி :

இப்படி ஒரு நிலையில் புகழ், பேன்ஸி என்பவரை 5 வருடங்களாக காதலித்து வந்தார். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய புகழ், ஐந்து வருடமாக நாங்கள் காதலித்து வருகிறோம். அவரை எனக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு ஆடிஷன் போகும்போது இருந்தே தெரியும். அவர் பெயர் பென்சி. நாங்கள் இந்த வருடம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறோம். கூடிய விரைவில் எங்கள் கல்யாணத்தைப் பற்றி சொல்கிறோம் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

காதலியை கரம் பிடித்த புகழ் :

இதனால் இவர்கள் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் பலரும் எதிர்பாத்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது திருமணத்தை முடித்தார் புகழ். திருமணத்திற்கு பின்னரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து அசத்தி இருந்தார். இப்படி ஒரு நிலையில் புகழ் மனைவி பேன்ஸி கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான விஷயத்தை புகழே தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கர்ப்பமான புகழ் மனைவி :

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘என்னுடைய வளர்ச்சியில் வழித்துணையாய் வந்தவள், இப்போது என்னை என் வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளாள். இத்தனை நாட்களில் எத்தனையோ பரிசுகளை எனக்கு அளித்தவள், ஆனால் இன்று அவள் அளித்த பரிசிற்கு ஈடு இணையே இல்லை. என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ, இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப்போகிறது என்று நினைக்கும் போது, இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை. என்னை தகப்பனாக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள்… இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் பென்ஸி’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement