பவித்ராவை தொடர்ந்து சதீசுக்கு ஜோடியான குக்கு வித் கோமாளி பிரபலம் – யார் தெரியுமா ? (இவங்களும் ஹீரோயின் ஆகிட்டாங்கபா)

0
375
rithvika
- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலம் தற்போது தமிழ் சினிமாவின் கதாநாயகியாக அறிமுகமாக உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற பலரும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். சிவகார்த்திகேயன், சந்தானம் தொடங்கி பிரியா பவானி சங்கர், வாணிபோஜன் என பல நடிகர்கள் சின்னத் திரையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி வெள்ளித்திரையில் ஜொலித்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் இருந்த ரித்திகாவிற்கும் சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது மூன்றாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. சொல்லப்போனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு உள்ளது. மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சி:

ஏற்கனவே தர்ஷா சின்னத்திரை சீரியல்களில் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர். அதுமட்டுமில்லாமல் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் பிரபலமானார். பின் கடந்த ஆண்டு வெளியான ருத்ரதாண்டவம் என்ற படத்தில் தர்ஷா கதாநாயகியாக நடித்திருந்தார். அதேபோல் பவித்ராவும் ஏற்கனவே படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பவித்ராவும் படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான நாய் சேகர் என்ற படத்தில் பவித்ரா நடித்திருந்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலங்கள்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இந்த வரிசையில் தற்போது ரித்திகா இணைந்துள்ளார். இவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர். அதிலும் இந்த நிகழ்ச்சியில் இவருக்கும் பாலாவுக்கும் இடையே நிகழும் காட்சிகளெல்லாம் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது. மேலும், இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் தான் மக்கள் மத்தியில் பரிச்சயமானார். இந்தத் தொடரை அடுத்து இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்கு பிறகு ரித்திகா தமிழ்ச்செல்வி நிறைய ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

-விளம்பரம்-

ரித்திகாவின் சின்னத்திரை பயணம்:

தற்போது ரித்திகா தமிழ்ச்செல்வி அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பியில் முன்னிலையில் வகித்துக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த தொடரிலும் இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி தொடர்கள், நிகழ்ச்சிகள் என்று மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த ரித்திகா தற்போது ஒரு படி உயர்ந்து கதாநாயகியாக அனைவரையும் மகிழ்விக்க போகிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. தற்போது இவர் கதாநாயகியாக உருவெடுத்துள்ள நிலையில் இதனை இவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

ரித்திகா நடிக்கும் படம் பற்றிய தகவல்:

நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக தோன்றியிருக்கும் சதீஷ்க்கு ஜோடியாக ரித்திகா தமிழ்ச்செல்வி நடிக்கிறார். இந்த படத்தை சிக்சர் படத்தை இயக்கிய சாச்சி இயக்குகிறார். இவர்களுடன் படத்தில் வித்யா பிரதீப், பாவல் நவகீதன் மற்றும் அஜய் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தை சண்முகம் கிரியேஷன்ஸ் மற்றும் சீட்ஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் கிரிஷ் புரோடக்சன் ஹவுஸ் இணைந்து தயாரிக்கிறது. பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார் ஜோன்ஸ் ரூபர்டின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement