விஜய் டிவி என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தான். அந்த அளவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், பிக் பாஸ், காமெடி சாம்பியன்ஸ், பிபி ஜோடிகள் என்று பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் டாப் லிஸ்டில் இருப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக சென்று கொண்டு இருக்கிறது.
முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்து இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். மேலும், இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பத் மற்றும் தாமு இருக்கிறார்கள். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ரக்ஷன்.
இதையும் பாருங்க : மணிவண்ணன் இறந்த சில மாதத்தில் இறந்த அவரின் மனைவி – உறவினர்கள் வேண்டாம் என்று தடுத்தும் ஈழப் பெண்ணை திருமணம் செய்த மணிவண்ணன் மகன்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி:
மேலும், கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மாறினாலும் கடந்த 3 சீசன்களாக மாறாமல் இருப்பது இந்த நிகழ்ச்சியின் நடுவர், தொகுப்பாளர் தான். தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு வாரமும் எபிசோடில் புதுவித கெட்டப்பில் கோமாளிகள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி:
இதனால் கடந்த 2 சீசன் களை விட இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களாக கிரேஸ், அம்மு, ரோஷினி, சந்தோஷ் பிரதாப், வித்யூலேகா ராமன் ஆகியோர் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் ஸ்பெஷல் கோமாளிகள் செய்யும் காமெடி கலாட்டா தான். வாரம் இது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தவர் சந்தோஷ். இவர் படங்களில் நடித்து இருக்கிறார்.
சந்தோஷ் -சுனிதா:
இருந்தாலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் சந்தோஸும் சுனிதாவும் செய்யும் சேட்டைகள் எல்லோருக்குமே பிடிக்கும். இதனால் இவர்களை குறித்த வீடியோக்கள், மீம்ஸ்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பேமஸ். அதுமட்டும் இல்லாமல் இவர்கள் காதலிக்கிறார்கள் என்ற வதந்தி பரவி கொண்டு இருந்தது. சில வாரங்களுக்கு முன் சந்தோஷ் பிரதாப்பின் வெளியேற்றும் பலரையும் அழவைத்து இருந்தது. போட்டியாளர்களும் அவருடைய எழிமினேஷன் நினைத்து பலரும் கண்கலங்கி இருந்தார்கள்
சந்தோஷ் திருமணம்:
இந்நிலையில் சந்தோஷ் திருமணம் செய்யும் நபர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. சமீபத்தில் சந்தோஷ் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவரிடம் ரோஷினி, சுனிதா இவர்களில் ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால் யாரை செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள்? அதற்கு சந்தோஷ் கூறியிருந்தது, சுனிதா எனக்கு நல்ல தோழி. அதனால் அவரை திருமணம் செய்ய ஒப்புக் கொள்வேன் என்று கூறியிருந்தார். எல்லோரும் எதிர்பார்த்தபடி சந்தோஷ் கூறியிருந்தார். ஒருவேளை இவர்கள் இருவருமே நிஜத்தில் திருமணம் செய்து கொள்வார்களா? என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.