இவர் தான் கூக்கு வித் கோமாளி இயக்குனரா. இவ்ளோ யங்கா இருக்காரு.

0
36696
Cooku
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிறைவடைந்தகுக்கூ கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதுவரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் விஜய் டிவியின் டிஆர்பி -யில் முதலிடத்தில் இருந்தது என்று சொன்னாலும் அதற்கு நிகரில்லை. இந்த நிகழ்ச்சியில் சமையல் தெரிந்த 8 போட்டியாளர்களும் அவர்களை தொல்லை செய்யும் 8 கோமாளிகளும் பங்கு பெற்றார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் இறுதி போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

-விளம்பரம்-

இதில் முதல் இடத்தை வனிதாவும் இரண்டாவது இடத்தை உமா ரியாசும் பிடித்து இருந்தார்கள். விஜய் தொலைக்காட்சியில் இதுவரை சமையல் சமையல் கிச்சன் சூப்பர் ஸ்டார் சமையல் சமயல் வித் வெங்கதேஷ் பட் கிச்சன் கலாட்டா என்று பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி இருந்தது ஆனால் குக்கூ கோமாளி நிகழ்ச்சிதான் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஹிட்டடித்தது இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று இந்த நிகழ்ச்சி குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார் இந்த நிகழ்ச்சியை யாராவது ஒரு அனுபவம் வாய்ந்த வயதான இயக்குனர்தான் பேசியிருப்பார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் மிகவும் இளமையான தோற்றத்துடன் பார்த்திபன் என்பவர் இந்த நிகழ்ச்சியை இயக்கியிருப்பது தான் பலருக்கும் ஆச்சரியமான ஒரு விஷயம்.

- Advertisement -

இந்த நிகழ்ச்சி குறித்து பேசியுள்ள இயக்குனர் பார்த்திபன் இந்த நிகழ்ச்சியில் எதுவுமே நாங்கள் திட்டமிட்டு எடுக்கவில்லை அதுவாகவே தானாக அமைந்துவிட்டது உதாரணமாக ஒரு கோமாளி ஒரு குழுவை தேர்ந்தெடுக்கிறார் என்றால் ரசிகர்களுக்கு எந்த அளவிற்கு ஒரு ஆவல் இருக்குமோ அதே ஆவல் தான் எங்களுக்கும் இருந்தது இதனால் நிகழ்ச்சி மிகவும் எதார்த்தமாக அமைந்திருந்தது இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளை சமாளிப்பது விட சமையல் செய்பவர்களை சமாளிப்பது தான் எங்களுக்கு மிகுந்த கடினமாக இருந்தது மேலும் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததும் அனைவருமே கொஞ்சம் வருத்தப்பட்டார்கள்.

வீடியோவில் 10 : 56 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

புகழ் கூட அடுத்த நாள் எனக்கு போன் செய்து என்னய்யா முடிந்துவிட்டதா இனிமேல் நீங்கள் என்னை அழைக்க மாட்டீர்களா என்று மிகவும் வருத்தப்பட்டு என்னிடம் கேட்டார் என்று கூறியுள்ளார் மேலும் எந்த பேட்டியின்போது ஊக்குவித்து கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் எப்போது வரும் என்று கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்துள்ள பார்த்திபன் கண்டிப்பாக உடனடியாக வராது குறைந்தபட்சம் ஒரு மாதமாவது அதற்காக நேரம் எடுத்துக்கொள்ளும் தொலைக்காட்சியில் நாங்கள் இது குறித்து பேசி விட்டோம் ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர்கள் தான் அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் எனவே ஊக்குவித்து கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் உறுதியாகி விட்டது என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்

Advertisement