சூப்பர் சிங்கர் வெற்றியாளர் முதல் சார்பட்டா நடிகர் வரை – குக்கு வித் கோமாளி 3யில் கலந்துகொள்ளும் பிரபலங்களின் லிஸ்ட்.

0
1027
cooku
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

-விளம்பரம்-
குக்கு வித் கோமாளி

இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிக்கு இணையாக காமெடி செய்கிறார்கள் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வந்த வெங்கடேஷ் பத் மற்றும் தாமு. அதுமட்டுமில்லாமல் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு ஒரு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளது.

- Advertisement -

குக் வித் கோமாளி 3 பட்டியல்:

மேலும், தற்போது குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசன் ஆரம்பம் ஆகிறது. இதற்கான புரோமோ சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த புரோமோ வெளியானதைத் தொடர்ந்து பலரும் தங்களுடைய சந்தோஷத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த முறை குக்காக நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வந்த நிலையில் போட்டியாளர்கள் உடைய பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அந்தோணிதாசன்:

இவர் நாட்டுப்புற இசைக் கலைஞராக இருந்து சினிமாவில் மிகப் பிரபலமான பாடகர் ஆனார். சந்தோஷ் நாராயணன் இசையில் இவர் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். தற்போது இசை அமைப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-
அந்தோணி தாசன்

க்ரேஸ் கருணாஸ்:

இவர் தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான பாடகி. நகைச்சுவை நடிகர் கருணாஸ் மனைவி. அதுமட்டுமில்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ஷோக்களில் நடுவராக பங்கேற்று இருக்கிறார்.

கிரேஸ் கருணாஸ்

மனோபாலா:

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் மனோபாலா. இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு இருக்கிறார். இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

தர்மதேவதைக்கு அநீதியா.. மனோபாலா ஆவேசம் | Manobala slams the arrest of  Jayalalitha - Tamil Filmibeat

சந்தோஷ் பிரதாப்:

இவர் சர்பாட்டா படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் பிக் பாஸ் சீசன் 5க்கு செல்வதாக இருந்தது. பின் சில காரணங்களால் தடைபட்டு விட்டது. மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தில் இவர் நடித்திருக்கிறார்.

`சார்பட்டா' சந்தோஷ் பிரதாப்

வித்யுலேகா:

பிரபல நகைச்சுவை நடிகை வித்யுலேகா. தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடந்தது.

சட்டை பட்டனை கழட்டிவிட்டு குட்டை டவுசருடன் போஸ் கொடுத்த வித்யுலேகா ராமன்...  வேற லெவல் கவர்ச்சி கிளிக்ஸ்...! | Actress vidyullekha raman hotness  overloaded photos ...

கோமாளிகள்:

ஷிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா ஆகியோர் கோமாளியாக ப்ரோமோவில் வந்திருந்தது அனைவருக்கும் தெரியும். இவர்களை தவிர தற்போது கோமாளியாக

வெளியானது குக் வித் கோமாளி 3 புரமோ.. ரசிகர்கள் தேடிய அந்த கோமாளி மட்டும்  மிஸ்ஸிங்!

குரேஷி:

விஜய் டிவியில் வரும் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆவார்.

மூக்குத்தி முருகன்:

இவர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் சூப்பர் சிங்கர் சீனியர் 7 இல் கலந்துகொண்டவர். அந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆவார். இவருடைய தனி சிறப்பே பெண் குரலிலும் பாடுவது தான்.

Super Singer winner: Mookuthi Murugan's victory meets with mixed response

பரத்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். தற்போது சினிமாவில் இவர் பல பாடல்களை பாடி இருக்கிறார்.

இவர்களை தவிர இந்த நிகழ்ச்சியில் மதுரைமுத்து, புகழ் இருவரும் வார இறுதியில் எபிசோடுகளில் வர இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement