வைல்டு கார்ட் மூலம் பைனல் போன அந்த ஒரு நபர், வெள்ளிக்கிழமையே முடிந்த CWC3 Final – கோமாளி வெளியிட்ட புகைப்படம்.

0
573
cookuwithcomali
- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி முடிவுக்கு வந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று வருடமாக ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி தான் டாப்பில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது. இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மாறினாலும் கடந்த 3 சீசன்களாக மாறாமல் இருப்பது இந்த நிகழ்ச்சியின் நடுவர், தொகுப்பாளர் தான்.

- Advertisement -

இதையும் பாருங்க : 15 நாளைக்கு முன்னாடி தான் Spl ஷோ பாக்க அவர் வந்திருந்தார் – ப்ளூ சட்டைக்கு தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த பார்த்திபன்.

குக் வித் கோமாளி சீசன் 3 வைல்ட் கார்டு:

இந்த நிகழ்ச்சியில் நடுவர் வெங்கடேஷ் பத் மற்றும் தாமு. தொகுப்பாளர் ரக்ஷன் ஆவார். சமீபத்தில் தான் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி கோலாகலமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியில் பல வித்தியாசமான கான்செப்ட்களை கொண்டு இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்றுக்கு ஸ்ருதிகா, தர்சன், அம்ம அபிராமி, வித்யூலேகா சென்றிருக்கிறார்கள். தற்போது குக் வித் கோமாளி சீசன் 3ன் வைல்ட் கார்டு சுற்று நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-

குக் வித் கோமாளி சீசன் 3 வின்னர்:

இந்த சீசனில் முன்பு வெளியேறிய போட்டியாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் பலரும் முத்துக்குமார் அல்லது சந்தோஷ் தான் சென்று இருப்பார்கள் என்றும் சொல்லி வருகின்றனர். இதிலிருந்து இறுதி சுற்றுக்கு கிரேஸ் தகுதி பெற்று இருக்கிறார். இந்த நிலையில் இறுதிப்போட்டி நடந்து முடிந்ததாக தெரிய வருகிறது. அதாவது, சிவாங்கி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டு கூறி இருப்பது, ‘its wrapp.

சிவாங்கி பதிவிட்ட பதிவு:

உங்களை அடுத்த சீசன் சந்திக்கிறேன் என பதிவிட்டிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் வித்யு லேகா பட்டத்தை வென்று இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படி சிவாங்கி பதிவிட்ட பதிவும், புகைப்படமும் சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. யார் இந்த சீசனின் டைட்டில் வின்னர்? என்று ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர். மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவாங்கி . பிரபல பின்னனி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் தான் சிவாங்கி.

சிவாங்கி குறித்த தகவல்:

பாடகியான இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் இவர் அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே எலிமினேட் ஆகி வெளியேறி இருந்தார். இருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த டான் படத்தில் சிவாங்கி நடித்து இருந்தார். தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, சினிமா, பாடல் பாடுவது, நிகழ்ச்சி என பட்டைய கிளப்பிக்கொண்டு இருக்கிறார்.

Advertisement