பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நேற்று (பிப்ரவரி 14) சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எதிராக #GoBackModi என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகிவந்தது . விவசாய போராட்டம் உச்சத்தில் இருக்கும் நிலையில், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறாமல் இருக்கும் நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வருவதால் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக்கினை டுவிட்டரில் டிரெண்டாக்கி வந்தனர்.

பிரதமர் மோடி வருகை தமிழகத்திற்கு கருப்பு தினம் என்று கூறி நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும் போதும் #GoBackModi ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பெரும்பாலான சினிமா பிரபலங்கள் இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருக்கையில் குக்கு வித் கோமாளி ஷிவாங்கியும் #GoBackModi தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் என்று பெரும் சர்ச்சை எழுந்தது.

இதையும் பாருங்க : தனது முன்னாள் கணவர் ரஞ்சித்துடன் பல ஆண்டுகளுக்கு பின் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ள பிரியா ராமன்.

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த சீசன் இந்த அளவிற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதற்கு காரணமே இந்த சீசனில் வரும் கோமாளிகள் தான்.

அதிலும் புகழ், பாலா,ஷிவாங்கி , மணிமேகலையின் ரகலைகளுக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனால் ஷிவாங்கிக்கு பல ரசிகர் பட்டாளம் அதிகரித்து உள்ளது. இப்படி ஒரு நிலையில் மோடிக்கு எதிராக ஷிவாங்கி போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையானது. ஆனால், இது குறித்து விளக்கமளித்துள்ள ஷிவாங்கி, தனக்கு ட்விட்டர் கணக்கே இல்லை என்றும் தன்னுடைய பெயரில் செல்லப்பட்டு வரும் அந்த போலி கணக்கை புகாரளிக்குமாரும் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement