தனது முன்னாள் கணவர் ரஞ்சித்துடன் பல ஆண்டுகளுக்கு பின் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ள பிரியா ராமன்.

0
17178

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்த எத்தனையோ நடிகைகள் தற்போது சினிமாவில் ரீ – என்ட்ரியை தூங்கினாலும் ஒரு சில நடிகர் நடிகைகள் தற்போது சின்னத்திரை பக்கம் வந்துவிட்டனர். அந்த வகையில் பிரியா ராமனும் ஒருவர். தமிழில் 1993 ஆம் ஆண்டு, இயக்குனர் நட்ராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தயாரித்த ‘வள்ளி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியா ராமன். அதன் பின்னர் இவர் தமிழில் ஒரு சில படங்களில் தான் நடித்தார். இருப்பினும் இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. ஆனால், மலையாளத்தில் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது.

ப்ரியா ராமன் செம்பருத்தி ஸ்பாட்டில்

தமிழில் இவர் அறிமுகமான வள்ளி திரைப்படம் வெற்றிபெறவில்லை. ஆனால், இவர் சூர்யவம்ஸம் படத்தில் சரத்குமாரின் காதலியாக நடித்திருப்பார். அந்த படத்தின் மூலம் இவர் மிகப்பெரிய பிரபலம் கிடைத்தது. இறுதியாக இவர் நேசம் புதிது படத்தில் நடித்து இருந்தார் அதன் பின்னர் இவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை பட வாய்ப்புகள் குறைந்ததால் கடந்த திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன இவர் பின்னர் சீரியல்களில் கவனம் செலுத்தினார். 2000 ஆம் ஆண்டு மலையாள சீரியல் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை துவங்கிய பிரியா ராமன்.

இதையும் பாருங்க : பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் மகனை பாயத்துள்ளீர்களா ? இதோ புகைப்படம்.

- Advertisement -

தமிழில் இவர். ஸ்ரீதுர்கா கிரிஜா எம்ஏ பொறந்த வீடா புகுந்த வீடா போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்து வந்தார். இறுதியாக 2008ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொறந்த வீடா புகுந்த வீடா சீரியலில் நடித்த இவர் அதன்பின்னர் இடையில் ஒரு பத்து ஆண்டுகள் சீரியல் பக்கம் வரவில்லை அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி சீரியல் மூலம் தனது ரீ என்ட்ரி கொடுத்தார் இந்த சீரியல் மூலம் இவருக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் கிடைத்தது.

நடிகை பிரியா ராமனும் நடிகர் ரஞ்சித்தும் நேசம் புதிது படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது, இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 1999-ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஆதித்யா (வயது 14), ஆகாஷ் (10) என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நன்றாக சென்று கொண்ட இருந்த இவர்கள் வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட இவர்கள் இருவரும் கடந்த 2014 ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி இருவரும் சட்ட ரீதியாக விவகாரத்துப்பெற்று பிரிந்துவிட்டனர்.

-விளம்பரம்-

இந்த தம்பதியின் இரண்டு மகன்களும் பிரியா ராமனிடம் தான் வளர்ந்து வருகிறார்கள். விவாகரத்துக்கு பின்னும் பிரியா ராமன் – ரஞ்சித் இருவரும் நல்ல நட்பில் தான் இருந்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவரும் ரசிகருடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement