நிகழ்ச்சிக்கு மாஸாக வர ஆசைப்பட்டு தமாஷாகி போன சிவாங்கி – வைரலாகும் வீடியோ இதோ.

0
1433
shivangi
- Advertisement -

மாஸாக நிகழ்ச்சிக்கு வர நினைத்த சிவாங்கியை வைத்து செய்த dress சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் மூன்று வருடமாக ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி இருக்கிறது.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிக்கு இணையாக நிகழ்ச்சியின் நடுவர்களாக இருக்கும் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு காமெடி செய்கிறார்கள். அதோடு இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி கோலாகலமாக சென்று கொண்டு இருக்கிறது.

- Advertisement -

ஷிவாங்கி பற்றிய தகவல்:

மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. தற்போது நிகழ்ச்சியில் புகழுக்கு நிகராக ஷிவாங்கி வேற லெவலில் என்டர்டைன் செய்து வருகிறார். பிரபல பின்னனி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் தான் ஷிவாங்கி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டாலும் அதில் பாதியிலேயே எலிமினேட் ஆகி வெளியேறி இருந்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி:

இவரை பாடகியாக மக்கள் அறிந்ததை விட குக் வித் கோமாளியாக தான் ரசித்தவர்கள் அதிகம். சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து வந்திருந்தாலும் இரண்டாவது சீசன் மூலம் தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படை உருவானது. அதிலும் நிகழ்ச்சியில் அஸ்வின்- சிவாங்கி உடைய காம்போ வேற லெவல் என்றே சொல்லலாம். அதேபோல் சிவாங்கியும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் பாடி வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த டான் படத்தில் சிவாங்கி நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

டான் படத்தில் சிவாங்கி :

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. மேலும், இந்த படத்தில் சிவாங்கி பேசிய கிரஸ் குறித்த வசனம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்றது. வெளியான இரண்டு வாரங்களிலேயே இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிவாங்கி சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் விஜய் டிவியின் முக்கிய அங்கமாகவே தற்போது மாறி இருக்கிறார். இந்த நிலையில் சிவாங்கி தன்னுடைய சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

dress சம்பவம் வீடியோ:

அது என்னவென்றால், சிவாங்கி சமீபத்தில் ஒரு விருது விழாவுக்கு ஹீரோயின்கள் போன்ற நீளமான ஆடை அணிந்து வந்திருந்தார். ஆனால், அந்த ஆடையை அணிந்துகொண்டு அவரால் அங்கிருந்து படிக்கட்டுகளில் எளிதாக ஏற முடியவில்லை. இதனால் அவருக்கு மூன்று பேர் சேர்ந்து அவரது துணியை பிடித்துக் கொண்டு அவரை அங்கிருந்த படிக்கட்டுகளில் ஏற உதவி செய்து இருக்கிறார்கள். இதனை தான் சிவாங்கி dress சம்பவம் என்று கேப்சன் போட்டு பதிவிட்டிருக்கிறார்.

Advertisement