-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

‘அப்போ இது ரெண்டும் ஒன்னா’ – ஷிவங்கியின் இந்த வார கெட்டப்பை வச்சு செய்யும் நெட்டிசன்கள். இது யார்னு தெரியுதா ?

0
595
shivangi

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று வருடமாக ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் இருக்கிறது.

-விளம்பரம்-

அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிக்கு இணையாக நிகழ்ச்சியின் நடுவர் வெங்கடேஷ் பத் மற்றும் தாமு காமெடி செய்கிறார்கள்.தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி கோலாகலமாக சென்று கொண்டு இருக்கிறது.

இதையும் பாருங்க : ஷிவானி, கேபியை தொடர்ந்து அன்பு கேங்கில் காரை வாங்கிய பிக் பாஸ் பிரபலம். விலை எவ்ளோ தெரியுமா ?

Cwc ஏற்படுத்தி கொடுத்த பிரபலம் :

-விளம்பரம்-

மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவாங்கி . இவர் பிரபல பின்னனி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் தான் ஷிவாங்கி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டாலும் அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே எலிமினேட் ஆகி வெளியேறி இருந்தார். இருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

-விளம்பரம்-

Cwcயால் கிடைத்த சினிமா வாய்ப்பு :

இவர் முதல் சீசனில் வந்திருந்தாலும் இரண்டாவது சீசன் மூலம் தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படை உருவாகி இருந்தது. அதிலும் நிகழ்ச்சியில் அஸ்வின்- சிவாங்கி உடைய காம்போ வேற லெவல் என்றே சொல்லலாம். இவர்கள் இருவருக்காக மட்டுமே இந்த நிகழ்ச்சியை பார்க்கும் கும்பல் இருந்தது. அந்த அளவிற்கு இரண்டாம் சீசன் நிகழ்ச்சியில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி எல்லாம் வேற லெவல். அதேபோல் சிவாங்கியும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் பாடி வருகிறார்.

ஷிவாங்கி போட்ட சமந்தா கெட்டப் :

அதே போல சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் நடித்து இருந்தார் ஷிவாங்கி. என்னதான் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தாலும் இவரை திட்டி தீர்க்கும் ரசிகர்களும் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் வாரா வாரம் கோமாளிகளுக்கு பல விதமான கெட்டப் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் ஷிவாங்கி அடிக்கடி மிகவும் பிரபலமான கெட்டப்பை போட்டு வருகிறார்.

கேலி செய்யும் நெட்டிசன்கள் :

அந்த வகையில் இந்த வாரம் தெறி படத்தில் மித்ரா கதாபாத்திரத்தில் நடித்த சமந்தாவை போல கெட்டப்போட்டு அசத்தி இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் ஷிவாங்கியை கேலி செய்து வருகின்றனர். ஏற்கனவே, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு துல்கர் சல்மான் வந்திருந்தார். அப்போது ஷிவாங்கிக்கு ஓகே கண்மணி படத்தில் வந்த தாரா கெட்டப் போடப்பட்டு இருந்தது. அப்போது அவர் துல்கர் சல்மானுடன் தாராவை போலவே இமிடேட் செய்து இருந்ததை பார்த்து பலர் இரிடேட் ஆகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news