10 கிலோ குறைத்து இருக்கிறேன் – 7 வருடத்திற்கு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ஷிவாங்கி. எப்படி இருந்துள்ளார் பாருங்க.

0
486
shivangi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று வருடமாக ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி இருந்தது. முதல் சீசனை விட இரண்டாம் சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-

அதிலும் கொரோனா லாக்ட வுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிக்கு இணையாக நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வந்த வெங்கடேஷ் பத் மற்றும் தாமு காமெடி செய்கிறார்கள். அதோடு இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது. இதில் குக்குகளாக- அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, சந்தோஷ் பிரதாப், வித்யூலேகா கருணாஸ், பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சி:

இதில் முதலில் ராக்கி தாத்தா வெளியேறி இருக்கிறார். அதேபோல் கோமாளியாக சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா, குரேஷி, மூக்குத்தி முருகன், பரத் போன்ற பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த வாரம் செலிப்ரேஷன் ரவுண்ட் நடந்து முடிந்தது. இதில் கோமாளிகளும் குக்குகளும் பட்டைய கிளப்பு இருந்தார்கள். கடந்த வாரம் கிரேஸ், பாலா வெற்றி பெற்று ஃப்ரிட்ஜை தட்டி சென்றார்கள். இது ஒரு பக்கம் இருக்க, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. நிகழ்ச்சியில் புகழுக்கு நிகராக ஷிவாங்கி வேற லெவலில் என்டர்டைன் செய்து வருகிறார்.

சிவாங்கியின் சின்னத்திரை பயணம்:

பிரபல பின்னனி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் தான் ஷிவாங்கி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டாலும் அதில் பாதியிலேயே எலிமினேட் ஆகி வெளியேறினார். இருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். மேலும், சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் வந்திருந்தாலும் இரண்டாவது சீசன் மூலம் தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படை உருவானது. அதிலும் நிகழ்ச்சியில் அஸ்வின்- சிவாங்கி உடைய காம்போ வேற லெவல் என்றே சொல்லலாம். இவர்கள் இருவருக்காக மட்டுமே இந்த நிகழ்ச்சியை பார்க்கும் கும்பல் இருந்தது.

-விளம்பரம்-

சிவாங்கி நடிக்கும் படம்:

அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி எல்லாம் வேற லெவல். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு அஸ்வினியும், சிவாங்கியும் பல பேட்டிகள், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் இருந்தார்கள். அதேபோல் சிவாங்கியும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் பாடி வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடித்து இருக்கும் டான் படத்தில் சிவாங்கி நடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இதை தொடர்ந்து கண்ணன் இயக்கத்தில் காசேதான் கடவுளடா என்ற படத்தில் சிவாங்கி ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார்.

வைரலாகும் சிவாங்கி புகைப்படம்:

இப்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சி, சினிமா, பாடல் பாடுவது, நிகழ்ச்சி என சிவாங்கி பட்டைய கிளப்பிக்கொண்டு இருந்தாலும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தன்னுடைய சிறுவயது புகைப்படம், ரீல்ஸ் வீடியோ, போட்டோஷுட் புகைப்படம் என்று ஏதாவது ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தன்னுடைய பழைய புகைப்படம் ஒன்றை சிவாங்கி பதிவிட்டிருக்கிறார். அதில் அவர், 2015ஆம் ஆண்டு புகைப்படத்தையும் தற்போது இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு 65 கிலோவிலிருந்து 55 கிலோவிற்கு மாறி இருக்கிறேன். அதாவது 10 கிலோ உடல் எடையை குறைத்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement