ஷிவாங்கிக்கு வந்த திருமண ஆசை. ஓ, அதுனால தான் குக்கு வித் கோமாளி சீசன் 5ல வரலையா? அவரே பதிவிட்ட பதிவு இதோ.

0
421
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சிவாங்கி. ஆனால், இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே விஜய் டிவியில் பல ஆண்டுகாலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-
shivangi

இவர் மிகச்சிறந்த பாடகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். மேலும், மூன்று சீசன்களாக கோமாளியாக சிவாங்கி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு தனியாக ரசிகர் கூட்டமே உருவாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா பட வாய்ப்புகளும் வந்தது.

- Advertisement -

சிவாங்கி குறித்த தகவல்:

அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த டான் படத்தில் சிவாங்கி நடித்து இருக்கிறார். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தான் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்துஇருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

அதே போல சமீபத்தில் வடிவேலு நடிப்பில் வெளியாகி இருந்த ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திலும் ஷிவாங்கி நடித்து இருந்தார்.அதோடு சமீபத்தில் முடிவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசனில் சிவாங்கி குக்காக வந்து இருந்தார். ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இவர் நன்றாக சமைத்து மக்கள் மத்தியில் தன்னுடைய திறமையை நிரூபித்து இருந்தார். அதோடு டாப் 5ல் சிவாங்கி இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சி, சினிமா, பாடல் பாடுவது, நிகழ்ச்சி என சிவாங்கி பட்டைய கிளப்பிக்கொண்டு இருந்தார். ஆனால், அடுத்த சீசனில் நான் பங்கேற்க மாட்டேன் என்றும் கூறி இருந்தார் ஷிவாங்கி. அதற்கேற்றார் போல சமீபத்தில் வெளியான குக்கு வித் கோமாளி சீசன் 5 ப்ரோமோவில் கூட சிவாங்கி இடம்பெறவில்லை. இப்படி ஒரு நிலையில் திருமணம் மற்றும் பிள்ளை பெற்றுக்கொள்வது குறித்து ஷிவாங்கி பதிவிட்டு இருக்கும் பதிவு ரசிகர்களை ஷாக்காக்கி இருக்கிறது.

இதுகுறித்து தனது threads பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷிவாங்கி ‘ சோசியல் மீடியாவை திறந்தாலே நான் யாருக்காவது திருமணம் ஆவதையோ, நிச்சயம் முடித்ததையோ, கர்ப்பமாக இருப்பதையோ தான் பார்க்கிறேன். அந்த கட்டத்தில் தான் தற்போது நான் இருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் சிலர் வேண்டாம் என்று சொன்னாலும், ஒரு சிலரோ நல்ல முடிவு தான் என்று கூறி வருகின்றனர்.

Advertisement