சுட்டித்தனமான ஷிவாங்கியின் தம்பியை பார்த்துள்ளீர்களா ? அவர் என்ன செய்கிறார் தெரியுமா ?

0
1878
shivangi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது. சொல்லப்போனால் பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து இருந்தது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.

-விளம்பரம்-

இந்த சீசன் இந்த அளவிற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதற்கு காரணமே இந்த சீசனில் வரும் கோமாளிகள் தான். அதிலும் புகழ், பாலா, ஷிவானி, மணிமேகலையின் ரகலைகளுக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. அதிலும் இந்த சீசனில் புகழுக்கு நிகராக ஷிவாங்கி வேற லெவலில் என்டர்டைன் செய்து வருகிறார்.இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்.

இதையும் பாருங்க : நீங்கள் நடந்து கொண்டது அப்படி தான் இருந்தது – அனிதாவிற்கு கலர்ஸ் டிவி பிரபலம் அனுப்பிய மெசேஜ்.

- Advertisement -

அதிலும் இந்த சீஸனில் புகழ் மற்றும் ஷிவாங்கிக்கு என்று ஒரு தனி ரசிகர் ஆர்மியே உருவாகி விட்டது. பிரபல பின்னனி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான ஷிவாங்கி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டாலும் அதில் பாதியிலேயே எலிமினேட் ஆனார். அதன் பின்னர் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

ஷிவாங்கியின் அம்மா பிரபல பாடகி என்பதால் அனைவருக்கும் அவரை அறிந்து இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஷிவாங்கிக்கு ஒரு சகோதரர் இருப்பது பலரும் அறிந்திராத ஒன்று. அவருடைய பெயர் சுந்தர். அவர் தான் ஷிவாங்கியின் யூடுயூப் சேனல் வீடியோகளை எடுக்கும் கேமரா மேன் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சுந்தர், கல்லூரியில் படித்து வருகிறாராம்.

-விளம்பரம்-
Advertisement