குக்கு வித் கோமாளி ஜெனிலியா, ஸ்ருதிகாவின் கணவர் மற்றும் மகனை பார்த்துளீர்களா – இதோ புகைப்படம்.

0
2212
sruthika
- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை ஸ்ருத்திகா. இவர்
சென்னை எஸ் ஆர் ஆம் கல்லூரியில் பட்டபடிப்பை படித்தவர். பின் இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடித்த “ஸ்ரீ” படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா உலகில் அறிமுகனார். ஆனால், முதல் படமே படு தோல்வியடைந்தது. அதன் பின்னர் இவர் ஆல்பம், தித்துக்குதே, நள தமயந்தி போன்ற பல படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார் . ஆனால், இவர் நடித்த எந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடைய வில்லை. அதனால் ஸ்ருத்திகா சினிமாவில் இருந்து நடிப்பதை நிறுத்தி விட்டார்.

-விளம்பரம்-

மேலும், நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் நடிகை ஸ்ருதிக்கா. நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் காலகட்டத்தில் குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது . அதேபோல நடிகை ஸ்ருதிக்கு, ஆதித்யா சிவ்பிங்க் என்ற சகோதரரும் இருக்கிறார். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் கல்லூரி மாணவனாக நடித்து இருந்தார்.

- Advertisement -

ஸ்ருத்திகா திரை பயணம்:

இருந்தாலும் ஸ்ருத்திகாவால் சினிமா துறையில் சாதிக்க முடியவில்லை. இவர் சினிமாவில் இருந்து விலகி அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மகன் ஒருவர் இருக்கிறார். தற்போது ஸ்ருத்திகா குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி:

அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் மகிழ்விக்கும் நிகழ்ச்சியாக உள்ளது.

-விளம்பரம்-

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி போட்டியாளர்கள்:

இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பத் மற்றும் தாமு உள்ளார்கள். பின் இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் குக்குகளாக- அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, சந்தோஷ் பிரதாப் என்று பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இரண்டு வாரங்களாக இந்த நிகழ்ச்சி நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஸ்ருதிக்கா மீடியாவிற்கு நுழைந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இவருடைய பேச்சும், சமையலும் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

வைரலாகும் ஸ்ருதிக்கா குடும்ப புகைப்படம்:

அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மீண்டும் ரசிகர் பட்டாளம் உருவாகிறது என்று சொல்லலாம். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் அடிக்கடி தன் குடும்பத்துடன் எடுக்க புகைப்படங்களையும், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்ருதிக்கா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா! என்றும், அழகான க்யூட்டான குடும்பம் என்றும் கமென்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement