குக்கு வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர் – ஜோயாவை விடவா இவர் மோசமா சமைச்சார்

0
284
- Advertisement -

மாளி சீசன் 5 நிகழ்ச்சியிலிருந்து முதலில் வெளியேறி இருக்கும் நபர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களை கடந்து வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நான்கு சீசனும் ஒளிபரப்பாகி இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். கடந்த ஆண்டு தான் குக் வித் கோமாளியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு தான் நடுவர்களாக இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட் விலகி இருந்தது பலருக்கும் பேர் அதிர்ச்சி.

- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி:

பின் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிறுவனம் Media Masons 10, நிகழ்ச்சியின் இயக்குனர் ஆகியோர் விலகி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் தாமுடன் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார். அதே போல இந்த சீசனில் போட்டியாளர்களாக ஷெர்லின் சோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ஃபுட் ரிவியூவர் இர்பான், பாண்டியன் பூஜா, சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் போட்டியாளராக களமிறங்கி இருக்கின்றனர்.

நிகழ்ச்சி அப்டேட்:

இந்த சீசனில் புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிதா, kpy வினோத் ஆகியோர் இணைந்துள்ளனர். இதில் ரசிகர்களுக்கு பரிட்சியமில்லாத சில போட்டியாளர்களும் கலந்துகொண்டுள்ளனர். மேலும், நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களை கடந்து விட்டது. இரண்டாவது எபிசோடிலேயே குக்கிங் ஸ்டார்ட் ஆகிவிட்டது. இதில் செப்ஃ ஆப் தி வீக் பட்டத்தை சுஜிதா வென்றிருந்தார். இந்த வாரம் நிகழ்ச்சிக்கு நடிகை ராதா கெஸ்ட் ஆக வந்திருக்கிறார்.

-விளம்பரம்-

முதல் எலுமினேஷன்:

இந்த வாரம் நிகழ்ச்சிக்கு நடிகை ராதா கெஸ்டாக வந்திருக்கிறார். இந்நிலையில் இந்த வாரம் முதல் எலிமினேஷன் நடைபெற்று இருக்கிறது. அந்த வகையில் முதல் எலிமினேஷன் டாஸ்கில் நன்றாக சமைக்காதவர்களின் பட்டியலில் ஷாலின் சோயா, ஸ்ரீகாந்த் தேவா உடைய பெயர் வந்திருக்கிறது. இதற்கான ப்ரோமோ கூட வெளியாகியிருந்தது. பலரும் ஜோயா தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஸ்ரீகாந்த் தேவா வெளியேற்றம்:

பின் இறுதியில் ஸ்ரீகாந்த் தேவா தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து முதலாக வெளியேறி இருக்கிறார். ஆனால், ஜோயாவைவிடவா ஸ்ரீகாந்த் தேவா மோசமாக சமைத்தார் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அதே போல ஸ்ரீகாந்த் தேவா வைல்ட் கார்ட் போட்டியாளராக களமிறங்குவார் என்று எதிர்கார்க்கப்படுகிறது.

Advertisement