விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மட்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உண்டு பிற தொலைக்காட்சி நிகழ்ச்சி, சீரியல் பார்க்கும் நேயர்களும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பது வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த ஷோ எவ்வளவு வெற்றிகரமாக இயங்குகிறது என்றால் சீசன் 1 சீசன் 2 முடிந்து தற்போது சீசன் 3 வெற்றிகரமாக முடிந்துள்ளது. சீசன் 3 நிகழ்ச்சியில் கிருத்திகா என்பவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விஜய் டிவியின் மூலமாக சினிமா துறையில் கால் பதித்தோர் ஏராளம் அந்த விதத்தில் இன்று தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத உயரத்தில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியின் மூலமாக திரைப்படத்துறைக்கு வந்தவர் இவரைப் போன்று தான் சந்தானமும் சினிமாவுக்குள் வந்தார். குக் வித் கோமாளி ஷோவின் மூலமாக இப்போது சினிமாத்துறைக்குள் கால் பதித்தது. இந்த சோவில் பிரபல கோமாளியாக வலம் வந்தார் புகழ். இந்த ஷோவின் மூலமே புகழடைந்தார் என்று சொல்லாம்.
சினிமாக்கு போக விஜய் டிவி தரும் டிக்கெட் :-
சீசன் 1 குக்காக வந்த ரம்யா பாண்டியன் சீசன் 2 வில் குக்கா வந்த அஸ்வின் மற்றும் பவித்ரா இவர்கள் இருவரும் தற்போது சினிமாவில் படு பிஸியாக உள்ளனர். கோமாளிகளும் இவர்களுக்கு சலைத்தவர்கள் அல்ல இந்த சோவில் கோமாளியாக வலம் வரும் சிவாங்கி, மணிமேகலை, பாலா, சரத், சுனிதா இவர்களும் படங்களில் காமெடி ரோல்களில் பிச்சு உதறுகிறார்கள். அந்த வகையில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்தில் சிவாங்கி கதாநாயகியின் தோழியாக நடித்திருப்பார் அதில் சிவாங்கியின் நடிப்புக்கும் பஞ்சமில்லை. அவருடைய க்யூட்டான பேச்சுக்கும் பஞ்சமில்லை.
சிவாங்கியின் சினிமா வெற்றி :-
இந்த படத்தில் சிவகார்திகேயேன், சிவாங்கி காமெடி காட்சிகளுக்கு திரையரங்குகளில் சிரிப்பு சத்தம் வந்தவண்ணமே இருந்தது.டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியதால் சிவாங்கியும் இப்பொழுது படு பிஸியாக உள்ளார்.இந்த கோமாளிகளில் ஒருவரான சுனிதா அவர் நடனம் ஆடுவதில் கைதேர்ந்தவர். அவர் திரைப்படங்களில் நடனம் ஆடுவது டான்ஸ் ஷோ விஜய் டிவியின் மற்ற நிகழ்சியிலும் காமெடி செய்வது என பிசியாக வலம் வருகிறார்.
பிரபலமான கோமாளி சுனிதா :-
சுனிதா வெளிமாநிலத்தவர் என்பதால் அவர் பேசும் இனிமையான தவறான தமிழ் மொழியை பார்க்கும் மக்கள் அடக்க முடியாத அளவிற்கு சிரிப்பு வரும் மக்களின் கவனமும் இவர் பக்கமும் விழுந்தது. அதுமட்டுமில்லாமல் சுனிதா செய்யும் மொக்க காமெடிகளும் க்யூட்டா கொடுக்கும் எக்ஸ்பிரஷன் மூலம் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார்.இதனால் இவருக்கும் சரியான ரசிகர் பட்டாளம் இருப்பது உண்மைதான். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 1.4 மில்லியன் பாளோயர்ஸ் கொண்டுள்ளார். பிறகு இன்ஸ்டாகிராமில் இவருக்கென்ன அவரது ரசிகர்கள் ரசிகர் மன்றம் (Fan Page) நடத்தி வருகின்றனர். அந்த அளவுக்கு குக் வித் கோமாளி ஷோவின் ஒரு தூண் என்று சொல்லலாம்.
தவறுக்கான தண்டனை கொடுத்த சுனிதா :-
சுனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் கேள்வி கேட்டு பதில் சொல்வது. அப்போது அப்போது லைவ் வருவது ரசிகர்களுடன் உரையாடுவது என்பதை வழக்கமாக செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம்போல அவர் உரையாடலை தொடர்ந்தபோது ஒரு நபர் அவரிடம் பிகினி ஓபன் செய்து காட்டுங்கள் என தவறாக கேட்டுள்ளார். இதற்கெல்லாம் மனஉடைந்து போகாதவர் சுனிதா என்று அந்த ஷோ பார்க்கும் அனைவருக்கும் தெரியும். சுனிதா இனி இந்த செயலை அந்த நபர் வேறு யாரிடமும் செய்யக்கூடாது என்ற நோக்கத்துடன் அந்த நபரின் ஐடியுடன் அவர் இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி போட்டு பதிலடி கொடுத்துள்ளார். இதைப் பார்த்த சுனிதாவின் ரசிகர்கள் கோவமாக பொங்கி எழுந்தனர்