3 படத்துக்கு பின் மீண்டும் சுனிதாவிற்கு கிடைத்த சினிமா வாய்ப்பு – ஹீரோ இந்த CWC பிரபலம் தான். சுனிதாக்கு குஷி தான் போங்க.

0
854
sunitha
- Advertisement -

குக் வித் கோமாளி பிரபலம் சுனிதா சினிமாவில் களமிறங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று வருடமாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் இருக்கிறது.

-விளம்பரம்-

அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர் வெங்கடேஷ் பத் மற்றும் தாமு இருக்கிறார்கள். சமீபத்தில் தான் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பேர் வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு வருகிறார்கள்.

- Advertisement -

சுனிதாவின் பயணம் :

புகழ், பாலா, சிவாங்கி ஆகியோர் படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது சுனிதா இனைந்து உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நடன நிகழ்ச்சிகளாக “ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் ” போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்றவர் சுனிதா. இவர் நடனம் ஆடுவதில் கைதேர்ந்தவர். அவர் திரைப்படங்களில் நடனம் ஆடுவது, டான்ஸ் ஷோ என்று கலக்கி கொண்டு வருகிறார்.

மேலும், விஜய் டிவியின் மற்ற நிகழ்சியிலும் காமெடி செய்வது என்று சுனிதா பிசியாக வலம் வருகிறார். சுனிதா வெளிமாநிலத்தவர் என்பதால் அவர் பேசும் இனிமையான தவறான தமிழ் மொழியை பார்க்கும் மக்கள் அடக்க முடியாத அளவிற்கு சிரிப்பு வரும். இருந்தாலும், விடா முயற்சியினால் சுனிதா தமிழ் மொழியை கற்று வருகிறார். சுனிதா செய்யும் மொக்க காமெடிகளும், க்யூட்டா கொடுக்கும் எக்ஸ்பிரஷன் மூலம் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். இதனால் இவருக்கு என்று ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

-விளம்பரம்-

மீண்டும் சினிமாவில் வாய்ப்பு :

தற்போது இவர் ராஜு வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் இவர் சினிமாவில் களமிறங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சுனிதா அவர்கள் நடிகர் சந்தோஷ் பிரதாப்புடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அது குறித்த வீடியோவை சுனிதா சோசியல் மீடியாவில் பதிவிட்டு இது வெறும் டிரைலர் தான். விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளிவரும் என்றெல்லாம் என்று கூறியிருக்கிறார்.

சந்தோஷ் – சுனிதா :

ஏற்கனவே குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் சந்தோஷ் பிரதாப் மற்றும் சுனிதாவின் ரொமான்ஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து செய்த ரிலீஸ் வீடியோ எல்லாமே ரசிக்கும் வகையில் இருந்தது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற வதந்தி எல்லாம் சோசியல் மீடியாவில் பரவி இருந்தது. இப்படி ஒரு சூழ்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து படங்களில் நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement