பாதியில் வந்து பாதியிலேயே வெளியேறிய போட்டியாளர் – CWCயின் இந்த வார எலிமினேஷன் இவர் தான்.

0
1253
- Advertisement -

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எலுமினேட் ஆகியிருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசன் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி:

தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் புதிய கோமாளிகளும் கலந்து இருக்கிறார்கள். இதில் நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, நடிகை ஆண்ட்ரியான், ராஜ் ஐயப்பா, பாக்கியலட்சிமி VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் , மைம் கோபி ஆகியோர் போட்டியாளர்களாகவும் ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மணிமேகலை, சுனிதா, ரவீனா, தங்கதுரை, சில்மிஷம் சிவா, மோனிஷா என பலர் கோமாளியாகவும் கலந்து கொண்டு இருக்கிறார்.

நிகழ்ச்சியில் புது போட்டியாளர்கள்:

இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் கலந்து கொண்டிருந்தார். இவரை அடுத்து கலை இயக்குனர் கிரண் கலந்து இருக்கிறார். மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து கிஷோர், ராஜா ஐயப்பா, விஜே விஷால், ஷெரின், காளையின் என 5 போட்டியாளர்கள் வெளியேறியிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

எலிமினேட் குறித்த தகவல்:

இதனை அடுத்து கடந்த வாரம் நடைபெற்ற யூமினிட்டி டாஸ்க்கில் சிருஷ்டி டாங்கே வெற்றி பெற்றிருக்கிறார். இவரை அடுத்து மீதம் 6 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் கடுமையான போட்டி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேற இருக்கும் நபர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, இந்த வாரம் எலிமினேஷன் வாரம். இதனால் யார் வெளியே போகிறார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வாரம் வாழைப்பழத்தை வைத்து சமைக்க சொல்லி இருக்கிறார்கள். அதில் கஜேஸ் மற்றும் கிரண் சிறப்பாக செயல்படவில்லை. இதனால் இந்த நிலையில் இன்று நடைபெற்ற எலிமினேஷன் டாஸ்க்கில் கிரண் மற்றும் கஜேஸ் ஆகிய இருவரும் சமைத்தனர். இறுதியில் இன்றைய எபிசோடில் இருந்து கஜேஸ் வெளியேற்றப்பட்டார்.

Advertisement