கயில கயிறு, கேட்டா பெரிய செஃப் – கேலி செய்தவருக்கு குக்கு வித் கோமாளி நடுவர் கொடுத்த பதிலடி.

0
6366
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி நடுவர்களின் ஒருவர் வெங்கடேஷ் பத். இவர் இந்தியா முழுக்க இருக்கும் பல்வேறு ஹோட்டல்களில் சிறப்பு செஃப்பாக இருந்து வருகிறார். இவர் அசைவம் சாப்பிடுவது இல்லை என்றாலும் வெறும் வாசனையை வைத்தே அதில் இருக்கும் உப்பு முதல்கொண்டு சொல்லிவிடுவார். அந்த அளவிற்கு மிகவும் திறமையான ஒரு செஃப்பாக தான் இவரை சொல்ல வேண்டும்

-விளம்பரம்-

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருக்கிறார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் மிகவும் கறாரான ஒரு நடுவராக இருந்த இவர் குக் வித் கோணமலி நிகழ்ச்சியில் அப்படியே மாறி மிகவும் ஜாலியான ஒரு நடுவராக திகழ்ந்து வந்தார். சமையல் சமையல் நிகழ்ச்சியை விட இவருக்கு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிதான் ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்தது என்பதை மறுக்க முடியத உண்மை.

இதையும் பாருங்க : தன் ஓனர் முருகனை போல் அல்லாமல் காதலித்த பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் மணம் முடித்துள்ள கரட்டாண்டி.

- Advertisement -

தற்போது இவர் தன்னுடைய யூடியூப் பக்கத்தில்கூட சமையல் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் முகநூலில் ரசிகர் ஒருவர் இவரது கையில் கட்டியிருக்கும் கயிறை கேலி செய்து கமெண்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார் அதில்ஒரு மிகப்பெரிய செஃப், உணவு சமைக்கும் பொழுது கைககளில் கயிறு எல்லாம் கட்டிக்கொள்ளலாமா. கேட்டா பெரிய செஃப் என்று கிண்டல் செய்து பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த வெங்கடேஷ் பத், முறைப்படி பார்த்தால் சமைக்கும்போது பேசவே கூடாது. ஆனால், டிவில அதை பின்தொடர முடியாது. அதுபோல என் கையில் கயிறு இருப்பது என் நம்பிக்கை. கற்றுக்கொடுப்பது நான் கற்ற விதை. நீங்கள் பார்க்க வேண்டியது என் திறமையை, கையில் உள்ள கயிற்றை அல்ல என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement