தன் ஓனர் முருகனை போல் அல்லாமல் காதலித்த பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் மணம் முடித்துள்ள கரட்டாண்டி.

0
8220
- Advertisement -

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியான காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஹிட் அடித்தது. இதே படத்தில் பரத்துடன் மெக்கானிக் செட்டில் கரட்டாண்டி எனற கேரக்டரில் சின்ன பையன் வருவான் தெரியுமா? அந்த பையன் பெயர் அருண். அவர் தூத்துக்குடியை சேர்ந்தவர். காதல் படத்தில் நன்றாக இயல்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

-விளம்பரம்-

காதல் படத்தை தொடர்ந்து இவர் பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் மேலும் இவர் சிவகாசி படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவருக்கு இயக்குனர் பேரரசு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வந்தார் இவர் குழந்தை நட்சத்திரமாக இருந்த போது அந்த வாய்ப்புகள் கொஞ்சம் இவர் வளரத் தொடங்கியதும் குறைய ஆரம்பித்துவிட்டது.

இதையும் பாருங்க : மீண்டும் கிளாமர் உடையில் போட்டோ ஷூட் – கட்டுக்கடங்காமல் போகும் ஜூனியர் நடிகை.

- Advertisement -

இருப்பினும் ஒரு சில திரைப்படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தாலும் காதல் திரைப்படம் அளவிற்கு இவர் கவனிக்கப்படவில்லை இப்படி ஒரு நிலையில் இவருக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இவர் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் நடைபெற்று இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர் அதிலும் குறிப்பாக காதல் படத்தில் நடித்த காதல் சுகுமார் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தி இருந்தார். இவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. காதல் படத்தில் வரும் முருகனை போல அல்லாமல் காதலித்த பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் மணம் முடித்துள்ள இவரை பாராட்டலாம்.

-விளம்பரம்-
Advertisement