தாமுவுடனான வீடியோவை நீக்கிய வெங்கடேஷ் பத் – இருவருக்கும் இடையில் என்ன பிரச்சனை? அவரே கொடுத்த விளக்கம்.

0
135
- Advertisement -

குக்கு வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்த நிலையில் தற்போது வெங்கடேஷ் பத் போட்டு இருக்கும் முகநூல் பதிவு வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. அதோடு இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இதுவரை நான்கு சீசன்கள் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்து இருக்கிறது. கூடிய விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருக்கிறார்கள். நான்கு சீசன்களிலும் இவர்கள் தான் நடுவர்களாக இருந்தார்கள். இவர்கள் இருவருமே ஏற்கனவே பல டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றனர். மேலும், இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் படு பேமஸ் ஆனவர் வெங்கடேஷ் பட். ஏற்கனவே விஜய் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

- Advertisement -

இருந்தாலும், அந்த நிகழ்ச்சியில் இவர் மிகவும் கறாரான நடுவராக இருந்தவர். பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அப்படியே மாறி மிகவும் ஜாலியான ஒரு நடுவராக மாறி இருக்கிறார். தற்போது இவர் தன்னுடைய யூடியூப் பக்கத்தில்கூட சமையல் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் விரைவில் துவங்க இருக்கும் குக்கு வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் தான் கலந்துகொள்ளப் போவது இல்லை என்று அறிவித்து இருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார். அதன் பின்னர் செஃப் தாமுவும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாகவும் விரைவிலேயே வேறொரு நிகழ்ச்சியில் சந்திப்பதாகவும் அறிவித்திருந்தார்’. இருவர் காம்போவும் உடையவில்லை அவர்கள் வேற நிகழ்ச்சியின் வழியாக என்டர்டெயின் செய்வார்கள் என அவருடைய ரசிகர்களும் கமென்ட் செய்து கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் தாமுவுடன் பதிவிட்ட வீடியோவை நீக்கி இருந்தார் வெங்கடேஷ் பட். இதனால் தாமுவிற்கும் வெங்கடேஷ் பட்டிற்க்கும் பிரச்சனை என்பது போல சமூக வளைத்ததில் கிசுகிசு கிளம்பியது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள வெங்கடேஷ் பட் ‘

பூனை கண் மூடிற்றால் உலகம் இருண்டு விடுமோ………

இணையத்தில் பதிவை நீக்கினால்

உறைத்தது மறையுமோ…..

இதனால் உமக்கு கிடைப்பது எதுவாயினும்…..மகிழ்ச்சி என்றும் எனக்கே……

சொல் தவறினாலும் நட்பு மாறாது’ பதிவிட்டுள்ளார்.

Advertisement