மிகவும் கொடூரமான முறையில் கொள்ளப்பாட்டுல விசித்ராவின் தந்தை. அவரே சொன்ன ஷாக்கிங் உண்மை.

0
1778
Vichithra
- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களான கௌண்டமணி, செந்தில், வடிவேலு போன்றவர்களின் படங்களில் பெண் காமெடியன்களாக நடித்து பிரபமானவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் நடிகை விசித்ராவும் ஒருவர்.ஆரம்ப காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பின்னர் கதாநாயகியாகவும், வில்லி ரோல்களிலும் நடித்துள்ளார். சத்யராஜ் நடிப்பில் வெளியான வில்லாதி வில்லன், சூப்பர் ஸ்டார் நடித்த முத்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இந்நிலையில் இவர் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கிய “குக் வித் மோமாளி சீனன் 4” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். ஆனால் இவர் கலந்து கொண்ட சில காலத்திலேயே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்துவிட்டார். அதற்கு காரணம் அவரது தாய் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது என்று பரவலாக செய்தி சோசியல் மீடியாவில் வெளியானது.

- Advertisement -

விசித்ரா பேட்டி :

இந்த நிலையில் நடிகை விசித்ரா சமீபத்தில் பிக் பாஸ் பிரபலம் வனிதாவுடன் பேட்டி ஒன்றி பேசியிருந்தார். அவர் கூறுகையில் என்னுடை அம்மாவிற்கு இடுப்பில் அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் அவர் அதிலிருந்து மீளமுடியாமல் உயிரிழந்து விட்டார். அறுவை சிகிச்சை நல்ல படியாகத்தான் முடிந்தது ஆனால் அது நடித்து மூன்றாவது நாள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு 72 வயதாகிறது அவர் சில காலமாகவே உடல் நிலை சரியில்லாமல் தான் இருந்து வந்தார். அதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் தான் இப்படி ஆகிவிட்டது.

இப்போது என்னுடைய அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை என்று நடிகை விசித்ரா அவருடைய அப்பா மறைவு குறித்து பேசினார். அவர் கூறியதாவது “என்னுடைய அப்பா முகமூடி கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டார். என்னுடைய அப்பா இருந்த சமயத்தில் முகமுடி கொள்ளை என்பது அதிகம் நடந்து கொண்டிருந்தது. என்னுடைய அப்பா ஒரு வேளை அவர்களை தடுத்து நிறுத்தியிருப்பர், முகத்தை பார்த்திருப்பார் அதனால் அப்படி செய்து விட்டனர் கொள்ளையர்கள்.

-விளம்பரம்-

இப்போது என்னுடைய அம்மாவும் என்னுடன் இல்லை அப்பாவும் என்னுடன் இல்லை ஒரு அநாதை போல உணர்கிறேன். எதாவது தவறாக செய்தால் அப்பா திட்டுவார் என்ற எண்ணம் அப்போது இருந்தது. ஆனால் இப்போது அம்மாவும் மறந்த பின்னர் பேச்சு துணைக்கு கூட யாரும் இல்லை. சகோதரிகள் இருக்கின்றனர், ஆனால் அவர்கள் வேறுவேறு இடத்தில் இருக்கின்றன, அவர்களின் வாழ்க்கையை பார்த்து கொண்டு. அம்மா இறப்பதற்கு முன்னர் சில காலம் வயது முதிர்ச்சியால் சிரமபட்டு கொண்டு தான் இருந்தார் என்ற எண்ணம் எனக்கு இருந்தது.

ஆனால் அப்பா இறக்க 3நாட்களுக்கு முன்பு கடைக்கு பைக்கில் செல்லும் போது கீழே விழுந்து சுண்டு விரலில் அடிபட்டு விட்டது. அதனால் தொடர்ந்து அந்த காயம் பற்றி பேசிக்கொண்டே இருந்தார். ஆனால் அதற்கு பிறகு அப்பாவிற்கு இப்படி நடந்த பிறகு “அவர் சுண்டு விரலில் சிறிய அடிபட்டதற்க்கே அவ்வளவு வருந்தி இருக்கும் போது கொலை செய்யப்படும் போதும் அதனையே என்னுடைய அம்மா பார்க்கும் போது எப்படி வருந்தியிருப்பார் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அது எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது என்று கூறி வருந்தினார் நடிகை விசித்ரா.

Advertisement