அனைவரும் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக கடந்த வாரம் தொடங்கப்பட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பத் மற்றும் தாமு உள்ளார்கள். அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப்பில் உள்ளது. மேலும், இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது.
இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. அதனால் கொரோனா லாக்டவுனில் இருந்த பிரச்சனைக்கு ஒரு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். மேலும், குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி உள்ளது. இதில் குக்குகளாக- அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, சந்தோஷ் பிரதாப்,ரோஷினி என்று பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
குக்கு வித் கோமாளியில் வித்யு லேகா :
இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளாராக வித்யூலேகா கலந்து கொண்டிருக்கிறார். முதல் எபிசோடிலேயே நடுவர்களிடம் நல்ல பெயரை வாங்கி இருந்தார். மேலும், நடிகை வித்யுலேகா பிரபல நடிகர் மோகன் ராமனின் மகளாவார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன் வசந்தம்“ படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யூலேகா. அதன் பின்னர் பல்வேரு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
முதல் வாரத்திலேயே பல குறைகள் :
சமீபத்தில் தான் இவருக்கு திருமணமும் முடிந்தது. குக்கு வித் கோமாளி சீசன் 3 ஆரம்பித்த முதல் வாரத்திலேயே பல பஞ்சாயத்து ஆரம்பித்து. அதிலும் இந்த சீசனில் கோமாளியாக இருக்கும் பரத் காமெடி என்ற பெயரில் பலரை கடுப்பேற்றி வருகிறார். அதே போல நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பத், இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளை காமெடி என்ற பெயரில் பலமாக அடித்தவிடுகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தது.
சர்ச்சைக்கு வெங்கடேஷ் பத் விளக்கம் :
இதற்கு விளக்கமளித்த வெங்கடேஷ் பத், ‘உங்கள் அனைத்து பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. நீங்கள் உறங்க செல்லும் முன் மனம்விட்டு சிரிப்பீர்கள் என்று நினைக்கும் போது உற்சாகமாக இருக்கிறது. இதை ஒரு டிவி நிகழ்ச்சியாக மட்டும் பாருங்கள், இதில் எதையும் எடைபோட வேண்டாம். நாங்கள் செய்யும் அணைத்து விஷயங்களும் உங்களை சிரிக்க வைக்கத்தான். உங்களில் ஒரு சிலர் என் செயலால் காயப்பட்டு இருக்கலாம். ஆனால், நீங்கள் பார்ப்பது போல என்னுடைய எந்த செயலும் யாரையும் காயப்படுத்து.
வித்யு லேகா விளக்கம் :
நாங்கள் எந்த அளவிற்கு ஜாலியாக இருக்கிறோம் என்பதை காட்ட அப்படி உங்களுக்கு அது காட்டப்படலாம். நிகழ்ச்சியை பார்த்து ரசியுங்கள், அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இதே விஷயத்தை வித்யு லேகாவும் கூறியுள்ளார். அதில், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 100% இந்த நிகழ்ச்சியில் நான் நானாக தான் இருக்கிறேன். இதை ஒரு காமெடி நிகழ்ச்சியாக மட்டும் பாருங்கள். நீங்கள் சிரிக்க வேண்டும் என்று மட்டும்தான் அனைத்தையும் செய்கிறோம். இதில் யாரையும் நிஜமாக அடிப்பது கிடையாது எல்லாம் சவுண்ட் எபெக்ட் தான் என்று கூறியுள்ளார்.