குக்கு வித் கோமாளியில் இந்த வாரமும் ஒரு ட்விஸ்ட் – இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா ?

0
518
- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து நான்காவதாக எலிமினேட் ஆகியிருக்கும் நபர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு வருடமாக ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-
cooku

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும், கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

குக் வித் கோமாளி 4:

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் போட்டியாளராக நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, மைம் கோபி, ஆண்ட்ரியான், ராஜ்ஐயப்பா, பாக்கியலட்சிமி VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் உட்பட பலர் கலந்து கொண்டு இருக்கின்றனர். அதோடு இந்த சீசனில் புதிய கோமாளிகளும் கலந்து கொண்டுள்ளனர். ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மணிமேகலை, சுனிதா, ரவீனா, தங்கதுரை, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்றோர் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இந்த முறை சிவாங்கி போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கி வருகிறார். மேலும், இதுவரை இந்த சீசனில் 20 எபிசோடுகள் முடிந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை கிஷோர், காளையன், ராஜ் ஐயப்பன் ஆகியோர் எலிமினேட் ஆகியிருக்கிறார்கள். கடந்த வாரம் இம்யூனிட்டி டாஸ்க் நடந்திருந்தது. அதில் மைம் கோபி வெற்றி பெற்றிருந்தார். இதனால் அவரை இந்த வாரம் சமைக்க வேண்டாம் என்று நடுவர்கள் அறிவித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

எலிமினேட் ஆகும் நபர்:

இவரை அடுத்து மீதி இருப்பவர்கள் விசித்ரா, செரின், சிவாங்கி, ஸ்ருஷ்டி, விஷால் ஆகியோர் தான். இவர்களுக்குள் தான் கடுமையான போட்டி நிலவ இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேட் செய்திருக்கும் நபர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, இந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து விஜே விஷால் தான் வெளியேற இருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் வேற யாரும் இல்லைங்க, விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் பாக்கியலட்சுமி தொடரில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விஜே விஷால் குறித்த தகவல்:

இவர் இதற்கு முன்பு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பார்வையாளராக இருந்தார். அதன் பிறகு இவர் டிக் டாக், ரீல்ஸ் வீடியோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். அதன் மூலம் இவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் பாக்கியலட்சுமி சீரியலில் கலக்கிக் கொண்டு வருகிறார். இது மட்டும் இல்லாமல் இவர் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

Advertisement