செம சர்ப்ரைஸ் : ஒருதரில்லா வைல்டு கார்டு மூலம் இறுதி போட்டிக்கு நுழைந்த ரெண்டு போட்டியாளர்.

0
1005
cooku
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-

சொல்லப்போனால் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர். அதே போல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட னர்.

- Advertisement -

மேலும் போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர்.இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா ரித்திகா, பவித்ரா ஆகியோர் வெளியேறிய நிலையில் கடந்த வாரம் செமி பைனலுக்கான போட்டி படு மும்மரமாக நடந்தது. இந்த செமி பைனல் சுற்றில் கனி, பாபா பாஸ்கர், ஷகீலா, அஸ்வின் ஆகிய 4 பேர் பங்கேற்றனர்.

இதில் ஷகீலா வெளியேறினார். இப்படி ஒரு நிலையில் இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் 4 வது இறுதி போட்டியாளருக்கான வைல்டு கார்டு போட்டி இந்த வாரம் நடைபெற்றது. இதில் ஒருவர் தான் பைனலுக்கு தகுதி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஷகீலா மற்றும் பவித்ரா ஆகிய இருவர் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளனர். இதனால் பைனலில் கனி, பாபா பாஸ்கர், ஷகீலா, அஸ்வின், பவித்ரா ஆகிய 5 பேர் போட்டியிட இருக்கின்றனர் .

-விளம்பரம்-
Advertisement