4 நிமிடம் கூட வராத கெட்டப்பிறகு எதற்கு 4 மணி நேரம் மேக்கப் ? இதற்காக தான் புகழை Promote செய்ய பார்க்கிறார்களா ? நெட்டிசனின் பதிவு.

0
1348
pugazh
- Advertisement -

சமீபத்தில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ், காந்தாரா கெட்டப்பில் தோன்றியது பலரின் பாராட்டை பெற்றது. அதே சமயம் இது விமர்சனத்திற்கும் உள்ளது. இந்த எபிசோடை பார்த்த பார்த்த ரசிகார்கள் பலர் குக்கு வித் கோமாளிக்கு எதற்கு காந்தாரா கெட்டப் என்று கமன்ட் செய்து வந்தனர். மேலும், புகழுக்கு காமெடி வரவில்லை என்று இதையெல்லாம் try செய்கிறீர்களா என்ற விமர்சனமும் அதிமாக எழுந்தது.

-விளம்பரம்-

ஆனால், இந்த கெட்டப்பை வைத்து காமடி பண்ண முடியாது என்று ஒரு சில நிமிடங்களில் இந்த கெட்டப்பை மாற்றிவிட்டார் புகழ். இப்படி இருக்க 4 நிமிடம் கூட வராதா இந்த கெட்டப்பிற்கு எதற்கு 4 மணி நேரம் மேக்கப் என்ற கேள்வி எழுந்தது. மேலும், புகழ் சினிமாவில் நடிப்பதால் அவரை Promote செய்யவே விஜய் டிவி பாடுபட்டு இப்படியெல்லாம் புகழை ஒரு Performer என்று நிரூபிக்கப் பார்க்கின்றனர் என்ற விமர்சனமும் எழுந்தது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் முகநூல் இதனை குறிப்பிட்டு பயனர் ஒருவர் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘புகழ் இந்த கெட்டப் போட்டதை நான் குறை சொல்லல, ஆனால் இந்த ஷோ மூலமா சினிமா வாய்ப்புகள் நிறைய வந்த காரணத்தால் தான் சீசன் 3ல வரவே இல்ல நிறைய எபிசோடுகள். இவரை ஹீரோவா வச்சி முழு நீள படம் ஒன்னும் இவர் நடிக்க கமிட் ஆனதாக சீசன் 3 அப்போ ஒரு episode வந்தபோ சொல்லி இருப்பாரு.

இப்போ சீசன் 4ல முழு சீசனும் வருவாருன்னு வேற சொன்னாங்க… ஆக சினிமாவுல விட்ட மார்கெட்டை திரும்ப பெறவும், இவர் நடிச்சா படத்தை ( எப்படியும் சூட்டிங் முழுசா முடிஞ்சி இருக்கும் ) பார்க்க ஆடியன்ஸ் gain பன்றதுக்காகவும் தான் இந்த சீசன் முழுக்க வராரு. சரி, புதுசா ஏதாச்சும் செய்தாரான்னா என கேட்டால் இல்ல. அதே ஓவர் ஆக்டிங், இரிட்டேட்டிங் காமெடி தான் பண்ணுறாரு. இந்த வாரம் கெட்டப் ரவுண்டு.

-விளம்பரம்-

மத்த கோமாளிகள் எல்லோருக்கும் சீரியஸான சினிமா பாத்திரங்களை காமெடியாக கொண்டுவர மாதிரி கெட்டப் கொடுத்து இருக்காங்க. ஆனால் இவருக்கு மட்டும் இந்த மாதிரி ஹெவி மேக்கப் கெட்டப்… இந்த பாத்திரம் கடவுளுக்கு நிகராக பார்க்கப் படுற ஒரு பாத்திரம் தானே.. இதை வைத்து நகைச்சுவையாக என்ன காண்பிக்க முடியும் ? சரி, நிகழ்ச்சி தொடக்கத்தில் மட்டும் இந்த கெட்டப் என்றால் ஏன் இவருக்கு மட்டும் இவ்வளவு சலுகைகள் ? இவரோட dedication ஐ காட்ட மற்ற கோமாளிகள் எல்லாம் என்ன டம்மியா ?

என்னைப் பொறுத்தவரை புகழை காட்டிலும் குரேஷி மிகவும் திறமையானவர். எந்த ஒரு ஓவர் டூ வும் இல்லாமால் காமெடியை பெருமாலும் ரசிக்ககும் வண்ணம் செய்கிறார். ஆனால் பிற கோமாளிகள் எத்தனை சிரத்தை எடுத்து காமெடிகள் செய்தாலும், குறிப்பிட்ட கோமாளிகளை தவிர பிற கோமாளிகள் செய்யும் காமெடிகள் எடிட்டில் கட் செய்யப் படுகின்றன, எபிசோடில் அவை வருவதும் இல்லை.

எபிசோடில் தங்களது காமெடிகள் வர அவர்களும் குறிப்பிட்ட அந்த சில கோமாளிகள் போன்று ஓவர் ஆக்டிங் காமெடிகள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறார்கள். நிகழ்ச்சி முழுவதும் ஸ்கிரிப்ட் தான் என்பது அப்பட்டமாக தெரிகிறது. மூணு சிஸனாக சமையலில் அ,ஆ கூட தெரியாதது போல இருந்த சிவாங்கி, இந்த சீசனில் மட்டும் திடீர் குக் ஆகி விட்டார், அது மட்டும் இல்லாது செஃப் ஆப் தி வீக் எல்லாம் வேறு வாங்குகிறார். என்ன ஒரு காமெடி இது. இவரோடு மூன்று சீசனாக இருந்த பிற பழைய கோமாளிகளுக்கு மட்டும் இன்னும் சமையலில் எதுவும் தெரியாதாம். அதிலும் சுனிதாவிற்கு இன்னுமே தமிழ் ஒழுங்காக பேச வராதாம்!

Advertisement