‘சின்ன பொண்ணுங்கள கூட்டி வந்து அப்படி பண்றத பாக்க என்ன போக சொல்றீங்களா – பிக் பாஸ் குறித்து ஆவேசமாக பேசிய கூல் சுரேஷ்.

0
503
cool-suresh
- Advertisement -

வெந்து தணிந்தது காடு சிம்புக்கு வணக்கத்த போடு என்ற வசனத்தின் மூலம் சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர் நடிகர் கூல் சுரேஷ். தமிழ் சினிமா படங்கள் வெளியாகும் முதல் நாளே திரையரங்கிற்கு சென்று தனது விமர்சனத்தை கூறி பிரபலமான இவர் பல ட்ரெண்டிங் விஷயங்கள் குறித்தும் கருத்து தெரிவித்து வருகிறார். அதோடு அடிக்கடி எதாவது வாயைவிட்டு சர்ச்சையில் சிக்கிவிடுகிறார், அந்த வகையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் கூல் சுரேஷ். பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் கூல் சுரேஷ்.

-விளம்பரம்-
coolsuresh

அதற்கு பிறகு இவர் ஸ்ரீ, காக்க காக்க, மச்சி, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தேவதையை கண்டேன் போன்ற பல படங்களில் இவர் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.அதுமட்டுமில்லாமல் இவர் கலர் கலராக ஹேர் ஸ்டைலும், காஸ்ட்யூம் போட்டு கலக்கி இருக்கிறார். இவர் சினிமாவில் வில்லனாக தான் அறிமுகமானார். பின் காமெடியனாக மாறி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பிறகு நாட்கள் செல்லச் செல்ல இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியுள்ளது.

- Advertisement -

பின் கிடைக்கும் கதாபாத்திரங்களில் கூல் சுரேஷ் நடித்து வந்தார்.இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு கருத்துக்களை போட்டு சர்ச்சையாக்குவதை வழக்கமாக வைத்து உள்ளார். இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சித்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். அதிலும் மாநாடு படத்தின் ரிலீஸின்போது தியேட்டர் முன்பு மீடியாவிடம் கூல் சுரேஷ் பேசிய பேச்சுகள் மீம்ஸ் டெம்ப்ளேட் ஆகவே சோசியல் மீடியாவில் பயங்கரமாக வளர்ந்திருந்தது.

அதிலும், இவர் நெஞ்சில் மாஸ்க் போட்டு இருந்தது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து இருந்தது.இப்படி சமீபகாலமாக இவர் மிகவும் பிரபலமாகி வருகிறார். ஒவ்வொரு படத்தின் போதும் இவர் விமர்சனங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் படத்திற்குத் திரையரங்கு வாசலிலேயே பல் துலக்கிக் கொண்டே கமெண்ட் செய்திருந்தார்.

-விளம்பரம்-

பொன்னியின் செல்வன் படத்திற்கு குதிரையில் வந்து வியப்பில் ஆழ்த்தி இருந்தார். இப்படி அடிக்கடி தா ஏதாவது செய்து ரசிகர்கள் கவனத்தை பெற்று வரும் இவர் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசி இருக்கிறார், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கூல் சுரேஷிடம் பிக் பாஸில் நீங்கள் ஏன் போகவில்லை என்று கேட்டகப்பட்டு இருந்தது. அதற்கு பதில் அளித்த அவர் அதில் ‘பிக் பாஸ் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். சின்ன சின்ன பெண்களை அழைத்து வந்து அறையும் குறையுமாக ஆடை அணிவித்து ஆட வைக்கிறார்கள். அதை பார்க்க உள்ள போக சொல்கிறீர்களா ? நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன்’ என்று ஆவேசமுடன் பேசி இருக்கிறார்.

Advertisement