இதெல்லாம் அங்க போய் சொல்லு, நான் வாய திறந்த என்ன வரும் தெரியுமா ? கூல் சுரேஷ்ஷை வச்சி செய்த ராஜன்.

0
282
Coolsuresh
- Advertisement -

மேடையில் சபை நாகரித்தோடு பேசாததால் தயாரிப்பாளர் கே ராஜன் காலில் கூல் சுரேஷ் விழுந்து மன்னிப்பு கேட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் கூல் சுரேஷ். பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் கூல் சுரேஷ். அதற்கு பிறகு இவர் ஸ்ரீ, காக்க காக்க, மச்சி, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தேவதையை கண்டேன் போன்ற பல படங்களில் இவர் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் இவர் கலர் கலராக ஹேர் ஸ்டைலும், காஸ்ட்யூம் போட்டு கலக்கி இருக்கிறார். இவர் சினிமாவில் வில்லனாக தான் அறிமுகமானார். பின் காமெடியனாக மாறி நடித்து வருகிறார். மேலும், ஆரம்பத்தில் இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பிறகு நாட்கள் செல்லச் செல்ல இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியுள்ளது. பின் கிடைக்கும் கதாபாத்திரங்களில் கூல் சுரேஷ் நடித்து வந்தார். இது ஒரு பக்கம் இருக்க,

- Advertisement -

கூல் சுரேஷ் திரைப்பயணம்:

இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு சர்ச்சையில் கருத்துக்களை போட்டுக் கொண்டு வருவதை வழக்கமாக வைத்து உள்ளார். இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சித்து கமெண்டுகளை போட்டுவிடுகிறார்கள். அதிலும் சமீப காலமாக கூல் சுரேஷ் சிம்புவிற்கு ஆதரவாக பேசி வருகிறார். அதுவும் சிம்புவின் படம் வெளியாக போகிறது என்றால் எல்லோரையும் விமர்சித்து பேசுவார். இதனால் சினிமாவில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் இவர் பெரிய காமெடியனாக மாறி விட்டார் என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றது.

மாநாடு படம் போது கூல் சுரேஷ் செய்தது:

அதிலும் மாநாடு படத்தின் ரிலீஸின்போது தியேட்டர் முன்பு மீடியாவிடம் கூல் சுரேஷ் பேசிய பேச்சுகள் மீம்ஸ் டெம்ப்ளேட் ஆகவே சோசியல் மீடியாவில் பயங்கரமாக வளர்ந்திருந்தது. அதிலு,ம் இவர் நெஞ்சில் மாஸ்க் போட்டு இருந்தது குறித்து பல்வேறுசர்ச்சைகள் எழுந்து இருந்தது. இந்த நிலையில் கூல் சுரேஷ் தயாரிப்பாளர் ராஜன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட வீடியோ தற்போது வைரலாகி வைரலாகி வருகிறது. அது என்னவென்றால்,

-விளம்பரம்-

விழாவில் கூல் சுரேஷ் பேசியது:

படவிழா ஒன்றில் கலந்து கொண்ட கூல் சுரேஷ் அவர்கள் ‘வெந்து தணிந்தது காடு தக்காளி வணக்கத்த போடு’ என்று பயங்கரமாக விமர்சித்துப் பேசி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சபை நாகரீகம் இருப்பது என்பதை கூட அறியாமல்கூல் சுரேஷ் மிக மோசமாக பேசியிருந்தார். இதை கண்டித்து பத்திரிகையாளர்கள் பலரும் கேள்வி கேள்வி எழுப்பினார்கள். உடனே பத்திரிக்கையாளர்கள் இடம் கூல் சுரேஷ், எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள், பேசியது தவறுதான் வானம் வரை உயர்ந்து மன்னிப்பு கேட்கிறேன் என்றும்,

கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்ட காரணம்:

நான் என்ன பேசுகிறேன் என்று தெரியாமல் பேசிவிட்டேன் என்று வழக்கம்போல சமாளிக்கிறார். உடனே மேடைக்கு ராஜன் வருகிறார். அப்போது கூல் சுரேஷ், ராஜன் காலில் விழுந்து மன்னித்து விடுங்கள் என்று கேட்கிறார். பின் சபை நாகரீகம் என்பது எல்லோருக்கும் வேண்டும். அதை உணர்ந்து பேச வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். இப்படி இவர்கள் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் மீம்ஸ்ஸாக கிரியேட் பண்ணி ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement