‘என் தந்தை காணவில்லை’ – CCTV வீடியோவை வெளியிட்டு கண்ணீருடன் கூல் சுரேஷ் வெளியிட்ட வீடியோ.

0
767
coolsuresh
- Advertisement -

தன் தந்தையை காணவில்லை என்று கூல் சுரேஷ் வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கூல் சுரேஷ். இவர் தமிழ் சினிமா உலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு இவர் பல படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து பிரபலமானார். அதுமட்டுமில்லாமல் இவர் படங்களில் கலர் கலராக ஹேர் ஸ்டைலும், காஸ்ட்யூம் போட்டு கலக்கி இருக்கிறார். இவர் சினிமாவில் வில்லனாக தான் அறிமுகமானார். பின் காமெடியனாக மாறி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பிறகு நாட்கள் செல்லச் செல்ல இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

- Advertisement -

நன்றி தெரிவித்த சிம்பு:

தற்போது இவர் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் சிம்புவின் தீவிர ரசிகரும் ஆவார். எந்த படமானாலும் சரி, எந்த நிகழ்ச்சி என்றாலும் சரி இவர் வெந்து தணிந்தது காடு என்று தொடங்கி தன்னுடைய கருத்தை சொல்லிக் கொண்டிருந்தார். வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸுக்கும் முந்தைய நாள் நடிகர் சிம்பு உட்பட பல குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி இருந்தார்கள். அப்போது கூல் சுரேஷ்க்கு மனதார நன்றி தெரிவித்து இருந்தார் சிம்பு.

ஐசரி கணேஷ் கொடுத்த பரிசு:

அதற்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்து கூல் சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அது மட்டும் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூல் சுரேஷிற்கு பரிசு கொடுத்தது மட்டுமில்லாமல் அவரின் குழந்தைகளின் படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தன் தந்தை காணவில்லை என்று ககூல் சுரேஷ் வெளியீட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

கூல் சுரேஷ் தந்தை காணவில்லை:

கூல் சுரேஷ் தந்தை பெயர் முத்தையா. தற்போது அவருக்கு 84 வயதாகிறது. வயது மூப்பின் காரணமாக அவருக்கு சரியாக காது கேட்காது. 29/ 9 /2022 அன்று காலையில் 10 மணியளவில் நடை பயிற்சிக்காக கூல் சுரேஷின் தந்தை வெளியே சென்றிருக்கிறார். செல்லும்போது அவர் மஞ்சள் சட்டை, கட்டம் போட்ட நீல நிற லுங்கி, கையில் குடையுடன் சென்றிருக்கிறார்.

வைரலாகும் வீடியோ:

வெளியே சென்றவர் 24 மணி நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து கூல் சுரேஷ் அவர்கள் தன்னுடைய தந்தை காணவில்லை. யாராவது பார்த்தால் தயவு செய்து கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் அல்லது காவல் நிலையத்தில் கூறுங்கள் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement