ரயில்கள் விபத்து குறித்து சம்பவ இடத்தில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணி விளக்கம்

0
1355
- Advertisement -

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து சம்பவம் குறித்து தஞ்சாவூரை சேர்ந்த பயணி பதிவிட்டு இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பயணிகள் பயணித்த இரண்டு ரயிலும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக்கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் இதுவரை 250 பேருக்கு மேல் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

அதோடு 650 பேருக்கு மேல் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். விபத்து நடந்த இடத்திற்கு விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், இந்த கோர விபத்தில் ஹவுரா – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் – ஹவுரா சூப்பர் பாஸ்ட் அதுமட்டுமில்லாமல் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்குவதாக ரயில்வே அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

ஒடிஷா ரயில் விபத்து:

தற்போது இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதை தொடர்ந்து பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர், மு க ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் இந்த கோர சம்பவத்திற்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் இது ஒரு துக்க நாள் நாளாக அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்து இருக்கிறது. மேலும், இந்த சம்பவத்திற்கு ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பாலசோர் அருகே பஹானாகா பஜார் ஸ்டேஷன் என்ற இடத்தில் சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதி இருக்கிறது.

விபத்துக்கு காரணம்:

இதனால் சில பெட்டிகள் தரம் புரண்டு இருக்கிறது. அந்த தண்டவாளத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததால் தான் இந்த கொடூரம் நடந்தது. மேலும், அந்த பெட்டியில் உள்ள பயணிகள் தான் விபத்தில் சிக்கி இருக்கிறார்கள். மேலும், தடம் புரண்ட அந்த பெட்டிகளை ரயில்வே ஊழியர்கள் மீட்டு அருகே உள்ள தண்டவாளத்தில் நிறுத்தி வைத்திருக்கின்றனர். மேலும், இது குறித்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயணி கூறியது, நான் ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தேன்.

-விளம்பரம்-

விபத்து குறித்து பயணி சொன்னது:

விபத்து நடந்த போது நான் தூங்கிக் கொண்டிருந்தேன். விபத்து நடந்தபோது பயங்கரமான சத்தம் கேட்டது. ஸ்லீப்பர் பெட்டியில் மேல் படுகையில் இருந்தபடி மின்விசிறியை நான் கெட்டியாக பிடித்துக் கொண்டேன். ரயிலில் இருந்து கீழே இறங்கி பார்த்தபோது தான் எல்லோரும் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டது எனக்கு தெரிந்தது. என்னை காப்பாற்றுங்கள், எனக்கு உதவுங்கள் என்று சத்தம் போட்டு கத்திக் கொண்டிருந்தார்கள் என்று கூறி இருந்தார். இந்நிலையில் இந்த கோர சம்பவம் குறித்து தஞ்சாவூரை சேர்ந்த பயணி ஒருவர் சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

விபத்து குறித்து பயணி பதிவிட்ட வீடியோ:

அதில் அவர், நான் தஞ்சாவூரை சேர்ந்த வெங்கடேசன். சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸில் நான் பயணித்தேன். பாலசோர பகுதியில் டெல்லியில் இருந்து ஒரு ரயில் எதிரில் வந்து கொண்டிருந்தது. அப்போது அதன் பக்கத்தில் சரக்கு ரயிலும் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக சரக்கு ரயில் திடீரென்று தடம் புரண்டதால் தான் இந்த கோர விபத்து ஏற்பட்டது. இதில் 500 பேர் அதிகமாக இறந்திருக்கிறார்கள். நான் மீட்பு குழுவில் பணிபுரிகிறேன். அதனால் நான் என்னுடைய குழுவிற்கு தகவலை அளித்து முடிந்த வரைக்கும் நாங்கள் உதவிகளை செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.

Advertisement