உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் மின்னலை விட வேகமாக தாக்கி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கோடியையும், உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை லட்சத்தையும் கடந்து உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பீதியிலும், கவலையிலும் உள்ளார்கள். கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவலை தடுப்பதற்காக இந்திய முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்தும் 2021-க்கு முன் பயன்பாட்டுக்கு வராது என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த நியூஸ் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

2021-ம் ஆண்டு முன்பு கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்துகளும் பயன்பாட்டுக்கு வருவது வாய்ப்பு இல்லை என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் மருத்துவ வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் பாருங்க : உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தா எவ்ளோ பீல் பண்ணுவீங்க – ராபர்ட் மாஸ்டர் பேட்டி.

Advertisement

இருந்தாலும் இதுவரையில் கொரோனவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான கண்டுபிடித்துள்ள கோவேக்சின் என்றழைக்கப்படும் இந்த மருந்தை சென்னை எஸ்.ஆர். எம் மருத்துவமனை உட்பட நாடு முழுவதும் உள்ள 12 மருத்துவமனைகளில் சோதனை செய்ய ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று ஐ.சி.எம்.ஆர் அறிவித்திருந்தது. பின் உடனடியாக இந்த தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது மிகவும் ஆபத்து என்று மருத்துவ வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.

இந்தநிலையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியது, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவேக்சின், இசட்ஒய்கோவ்-டி ஆகிய இரண்டைச் சேர்ந்த 140-ல் 11 தடுப்பு மருந்துகள் மனித சோதனைக்கு வந்துள்ளது. இதில் எந்த தடுப்பு மருந்தும் 2021-ம் ஆண்டுக்கு முன்னதாக பொதுமக்கள் பயன்பாட்டுவராது என்று தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தான் இந்த மருந்து பயன்படுத்தப்படும் என்று சொன்னவுடன் சோசியல் மீடியாவில் சர்ச்சை கிளம்பி உள்ளது. ஏன்? எதற்கு? பல கேள்விகளை கேட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Advertisement
Advertisement