மூன்று மாதங்களாக இந்த கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த கொரோனா வைரஸ் தொற்று 192 நாடுகளில் பரவி உள்ளது. போரை விட பயங்கரமான அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் உள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கொரோனா ஆரம்பித்தது. சீனாவை தொடர்ந்து அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் போன்ற பல நாடுகள் இந்த நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உலக நாடுகள் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்துகின்றனர்.
இந்த கொரோனா வைரஸினால் லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள். கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கொரோனாவினால் அதிகம் பாதிப்படைந்தது இத்தாலி நாடு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதால் அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இந்தியாவில் இதுவரை 11 பேர் இறந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இந்திய பிரதமர் அவர்கள் 21 நாட்களுக்கு யாரும் வெளியில் வரக்கூடாது என்று ஊரடங்கு உத்தரவு இட்டு உள்ளார். இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
மேலும், கொரோனா வைரஸ் பரவல் காரணத்தினால் படப்பிடிப்புகள் எல்லாம் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் வெளியாக இருந்த படங்களின் தேதிகளும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பினால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி தீவு உள்ளிட்ட நாடுகளில் வருகின்ற ஜூன் மாதம் வரை எந்தவித திரையரங்கமும் திறக்கப்படாது என்று அதிரடியாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் சினிமா பிரபலங்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளார்கள்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நோய்த்தொற்று உள்ளவர்களும், வெளிநாடு சென்று வந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர். தற்போதைக்கு இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். கொரோனா வைரஸ் குறித்து பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதோடு பல முன்னணி நடிகர்கள் தங்களால் முடிந்த உதவி தொகையை கொடுத்து வருகின்றனர்.