கொரோனா அச்சத்தில் மூலிகை மருந்து சாப்பிட்ட குடும்பம். பின்னர் நேர்ந்த பரிதாபம்.

0
5525
corona
- Advertisement -

கடந்த சில மாதங்களாக ஒட்டுமொத்த உலகையும் கதி கலங்க வைத்து இருக்கிறது இந்த கொரோனா வைரஸ். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது இந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இந்த கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதால் அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-
image

- Advertisement -

இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். தற்போதைக்கு இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். இந்தியாவில் இதுவரை 5 பேர் இறந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : கொரோனா பரவாமல் இருக்க பார்த்திபனின் புதிய யோசனை. இவரால மட்டும் தான் இப்படி யோசிக்க முடியும்.

-விளம்பரம்-

இந்நிலையில் மதுரையில் ஒரு குடும்பம் கொரோனா காய்ச்சலுக்கு பயந்து மூலிகை மருந்து சாப்பிட்டதால் பரிதாப நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குன்னத்தூர் பட்டியை சேர்ந்த தம்பதியினர் முத்துக்கருப்பன்– கவிதா. இவர்களின் மகன் திராவிடச் செல்வம் என்பவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

image

இதனால் கொரோனா காய்ச்சல் என்று எண்ணி முத்துக்கருப்பன் வீட்டிலிருந்த மூலிகை மருந்தை திராவிட செல்வதற்கு கொடுத்துள்ளார். மேலும், குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் காய்ச்சல் பரவ கூடாது என்று பயந்து மனைவி கவிதா, மகன்கள் பெரியார் செல்வம், மற்றும் விஷ்வா ஆகியோரையும் மூலிகை மருந்தை சாப்பிட வைத்து உள்ளார். மூலிகை மருந்தை உட்கொண்ட நான்கு பேருக்கும் சிறிது நேரத்திலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதில் பதற்றமடைந்த முத்துக்கருப்பன் 4 பேரையும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார். அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பயத்தால் போதிய விழிப்புணர்வின்றி முத்துக்கருப்பன் மேற்கொண்ட செயலில் தற்போது அவருடைய குடும்பம் சோகத்தில் உள்ளது. இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

நேற்று இந்தியா முழுவதும் அனைத்து மாநில அரசுகளும் பிரதமர் மோடி வேண்டுகோள் படி சுய ஊரடங்கு அமல்படுத்தி இருந்தது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியில் செல்லக் கூடாது என்றும் மக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்து இருந்தது.

Advertisement