கொரோனா பரவாமல் இருக்க பார்த்திபனின் புதிய யோசனை. இவரால மட்டும் தான் இப்படி யோசிக்க முடியும்.

0
112433
parthiban
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பன்முகங்களை கொண்ட நபர்களில் பார்த்திபனும் ஒருவர். இவர் திரை உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர். இவர் சினிமா உலகில் நடிகர், இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். இவர் சினிமா துறையில் தனக்கென ஒரு பாதையும், முத்திரையும் உருவாக்கியவர். இவர் நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு இவருடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது “ஒத்த செருப்பு சைஸ் 7”.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் அவர்கள் இந்த கொரோனா வைரஸ் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது, இந்த கிருமி யுத்தம் உலக யுத்தத்தை விட கொடுமையாக உள்ளது. மக்களை பாதுகாக்க நம்முடைய இந்திய அரசாங்கம் பல்வேறு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மருத்துவர்கள், காவல்துறை, அரசு பணியாளர்கள் என அனைவரும் இந்த உயிர்க்கொல்லியை எதிர்த்து போராடி வருகின்றனர். மக்களும் அரசாங்கம் சொல்லும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : தயவு செஞ்சி போய் குளீங்க கிண்டலுக்கு உள்ளான கொரோனா ஜாக்லின். மேக்கப் இல்லாம என்ன இப்படி இருகாங்க.

எந்த நோய் வந்தாலும் மருந்து கொடுத்து சரி பண்ணிடலாம் என்பதை மீறி இந்த கரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய இடவசதி இல்லை என்பது தான் துயரமான விஷயம். இத்தாலி போன்ற ஒரு வசதியான நாட்டிலேயே இதை செய்யமுடியவில்லை. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ள நாட்டில் செய்வது மிக மிக கடினமான விஷயம்.

-விளம்பரம்-

இருந்தும் அரசாங்கம் இது சம்பந்தமான பல முயற்சிகளை செய்து வருகிறது. இந்நிலையில் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. புதிய மருத்துவமனைகள் இல்லாத நிலையில் சின்ன சின்ன இடங்களில் அவசர மருத்துவமனைகள் தொடங்கினால் நன்றாக இருக்கும். சின்ன சின்ன மருத்துவ குழுக்களாக பிரிந்து அந்த அந்த தெரு முனையிலும், சாலை பகுதிகளிலும், சின்ன சின்ன இடங்களிலும் 24 மணி நேரம் மருத்துவமனை ரெடி பண்ண நன்றாக இருக்கும்.

பெரிய பெரிய பிளாட் வைத்து உள்ளவர்கள் மருத்துவத்திற்கு தற்காலிகமாக கொடுத்து உதவி செய்தால் நன்றாக இருக்கும். என்னிடம் கூட பிளாட் உள்ளது. நானும் உதவி செய்ய தயார். இந்த மாதிரி செய்தால் தீவிரமாக பரவாமல் தடுக்கலாம். இது எவ்வளவு தூரம் பண்ண முடியும் என்று தெரியவில்லை. இது என்னுடைய யோசனை. உங்கள் யோசனைகளில் ஒன்றாக வைத்துக் கொள்ளுங்கள் தான் நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த தருணத்தில் நான் பத்திரிக்கையாளர்களுக்கும், செய்தி ஊடகங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒட்டுமொத்த உலகையும் இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது இந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இதனால் லட்சக்கணக்கான பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள்.

இந்த கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கொரோனாவினால் அதிகம் பாதிப்படைந்தது இத்தாலி நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement