கணவர் கொடுமையால் மனைவி புகார், கைது செய்யப்பட்ட 7 பேர் – ‘Couple Sharing’ விவகாரத்தில் ஈடுபட்ட 1000திற்கும் மேற்பட்ட தம்பதி. என்ன நடந்தது ?

0
401
couplesharing
- Advertisement -

பணத்துக்காக மனைவிகளை விபச்சாரத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல பேர் சிக்கி உள்ளதாக போலீஸ் தகவல் அளித்து உள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அடுத்த கருச்சால் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட திருமணம் ஆன பெண் ஒருவர் புகார் அளித்து உள்ள தகவல் அம்மாநிலத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அப்படி என்ன புகார் அந்த பாதிக்கப்பட்ட பெண் அளித்து உள்ளார் என்றால், எனது கணவர் வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தி கொடுமை படுத்துக்கிறார்.

-விளம்பரம்-

இயற்கைக்கு மாறாக உடலுறவு வைக்க துன்புறுத்துகிறார். என்னால் இந்த கொடுமையை தாங்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார். இதனை தொடர்ந்து அந்த பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பெண்ணின் கணவர் உட்பட 7 பேரை போலீஸ் கைது செய்து உள்ளது. அதோடு அந்த 7 பேரும் தங்களுடைய மனைவிகளை ஒருவருக்கொருவர் மாற்றி கொண்டு உடலுறவில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

- Advertisement -

மனைவியை விற்பவர்கள் கைது:

அதுமட்டுமில்லாமல் அதன் மூலம் அவர்கள் பணம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்து உள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் என ஏழு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் மனைவிகளை மாற்றிக்கொள்ளும் கலாச்சாரத்தில் இவர்களுடன் சேர்ந்து சுமார் 1000 தம்பதிகள் ஈடுபட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கோட்டையம் போலீசார் கூறியிருப்பது,

பல பேர் சிக்கி இருப்பதாக தகவல்:

மனைவிகளை மாற்றிக்கொண்டு இயற்கைக்கு மாறாக உடலுறவில் ஈடுபட்டு வந்த விவகாரத்தில் 7 பேர் கைது செய்து உள்ளோம். இன்னும் இந்த வழக்கு தொடர்பாக 25க்கும் மேற்பட்டோர் நபர்களை போலீஸ் தீவிரமாக கண்காணித்து விசாரித்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இது தொடர்பாக பலர் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்கள். மேலும், இது தொடர்ந்து காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் பேட்டி கொடுத்து இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, ஷேர் சாட், டெலிகிராம், மெசேஜர் போன்ற செயலிகள் மூலம் couple sharing செய்து கொள்ள விரும்புவார்கள் அறிமுகமாகின்றனர்.

-விளம்பரம்-

போலீஸ் அளித்த பேட்டி:

பின்னர் வாட்ஸ்அப், டெலிகிராம் என்று தனி குழுவை உருவாக்கி அதில் பழகி வருகின்றனர். சோசியல் மீடியா மூலம் பழகிய பின்னர் நேரில் சந்தித்து ஒரு நாளைக்கு அவரவர் மனைவிகளை பரிமாறிக் கொள்கின்றனர். சில நேரங்களில் ஒரு பெண்ணிடம் 3 பேர் உடல் உறவில் ஈடுபட்டுள்ளனர். அந்த சூழலில் மனைவியை அனுப்பி வைப்பவர் பேரம் பேசி காசு வசூலிக்கிறார். தற்போது கேரளாவில் கைதாகியுள்ளவர்கள் 3 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. சமூகத்தின் உயர் மட்டத்திலுள்ள பலர் இந்தக் குழுவில் இருப்பது தெரியவந்து உள்ளது.

இதே போல் நடந்த சம்பவம்:

மேலும், இந்த குழுவில் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளார்கள்? இந்த குழு உறுப்பினர்கள் வேறு ஏதேனும் குழுக்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கலா? என்பதை பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இதுபற்றிய தகவல்கள் கிடைத்தால் அறிவிப்போம் என்று போலீஸார் கூறி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் இதேபோல் கடந்த 2019ஆம் ஆண்டு காலத்தில் மிகப்பெரிய மனைவி பரிமாற்ற நெட்வொர்க் பிடிபட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement