பிக் பாஸ் ஒருங்கிணைப்பாளர் மீது கைது நடவடிக்கை? நிறுத்தப்படுமா பிக் பாஸ் 3 நிகழ்ச்சி.!

0
3350
Bigg-Boss
- Advertisement -

விஜய் டிவியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது துவங்கியுள்ளது. தமிழில் ஒளிபரப்பாவது போலவே தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் தெலுங்கு பிக் பஸ் நிகழ்ச்சி தற்போது புதிய சர்ச்சை ஒன்றை எதிர்கொண்டு உள்ளது.

-விளம்பரம்-
Image result for bigg boss 3 telugu

சமீபத்தில் கீர்த்தி ரெட்டி ஜகதீஸ்வரர் ரெட்டி என்ற திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் ஹைதராபாத் நீதிமன்றத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக பெட்டிசன் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த பெட்டிஷனின் பெயரில் திரைப்படங்களை சென்சார் செய்வது போலவே பிக்பாஸ் நிகழ்ச்சி இடம் சென்சார் செய்யப் பட வேண்டும் என்று நீதிமன்றம் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இதையும் பாருங்க : சிங்கப்பெண்ணே பாடலை தொடர்ந்து இணையத்தில் லீக்காண விஜய் பாடிய ‘வெறித்தனம்’ பாடல்.! 

- Advertisement -

கீர்த்தி ரெட்டி பிரகதீஸ்வரர் குறிப்பிட்டுள்ள புகாரில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அணிந்துவரும் ஆடையில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கீர்த்தி ரெட்டி இன் இந்த பெட்டிஷனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கடந்த செவ்வாய்க்கிழமை அதே நீதிமன்றத்தில் பெட்டிஷன் ஒன்றை அளித்திருந்தார்.

Image result for bigg boss 3 telugu

அந்த பெட்டிஷனில் போலீஸ் விசாரணை மேற்கொள்ளாமல் எந்த ஒரு கைது நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் கோரிக்கையை முன்வைத்துள்ளார். எனவே, இன்னும் ஒரு வாரத்தில் இந்த நிகழ்ச்சியை காவல்துறையினர் கண்காணித்து விசாரித்து தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர். இதுமட்டுமல்லாது ஹைதராபாத்தில் உள்ள இரண்டு காவல் நிலையத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தயாரிப்பாளருக்கு எதிராக இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

எனவே, நீதிமன்றத்தில் ஆஜரான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் வழக்கறிஞர், நீதிமன்றம் அந்த புகார்களை எல்லாம் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இந்த புகார் அளிக்கப்பட்டு உள்ளதால் இது தெலுங்கு பிக் பாஸுக்கு மிகவும் குடைச்சலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த புகாரால் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தெலுங்கில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் வரும் ஜூலை மாதம் 29ம் தேதி துவங்க இருக்கிறது இந்த நிகழ்ச்சியினை நாகர்ஜுனா தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Advertisement