ரூ. 60 லட்சம் வாடகை பாக்கியால் பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம் !

0
3125
mallika-sherawath

பாலிவுட் நடிகை மல்லிகா செராவத் தற்போது பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வசித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஒஸ்தி படத்தில் ‘கலாசலா’ பாடலில் ஐட்டம் டான்ஸ் ஆடி அசத்தி இருப்பார் மல்லிகா.

mallika

தற்போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சிரில் ஆக்சன்பென்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு பாரிசில் செட்டில் ஆகிவிட்டார். இருவரும் சேர்ந்து பாரிஸில் ஒரு வாடகை வீடு எடுத்து தங்கி வருகின்றனர்.

இவர்கள் தற்போது வசித்து வரும் வாடகை வீடு பெரும் பணக்காரர்கள் வசித்து வரும் பகுதியில் உள்ளது. இந்த வீட்டின் மாத வாடகை மட்டும் ₹4,60,000 ஆகும். வீட்டில் குடியேறும் போது 2 லட்சம் முன்பணமாக கொடுத்துள்ளார் மல்லிகா. அதன் பின்னர் ஒரு ரூபாய் கூட கடந்த 4 மாதமாக தரவில்லை என கோர்ட்டிற்கு சென்றுவிட்டார் வீடும் உரிமையாளர்.

mallika sherawat

இந்த விசாரணையில் மல்லிகாவும் அவரது கணவரும் தங்களுக்கு பண பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் அதனை ஏற்க மறுத்தது கோர்ட்.மேலும் உடனடியாக அந்த வீட்டை விட்டு வெளியேறுமாறு உத்தவைத்துள்ளது கோர்ட்.