பேட்ட மற்றும் விஸ்வாசம் வசூல் விவகாரம்.!நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

0
942
Petta Vs Viswasam
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படமும் அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி இருந்தது. படங்களுமே இரண்டு படங்களுக்கும் மத்தியில் ஆரம்பம் முதலே வசூல் சாதனையில் பல்வேறு குழப்பங்களும், மோதலும் ஏற்பட்டது.

-விளம்பரம்-
High court

இந்நிலையில் இந்த இரண்டு படத்தின் வசூலை பற்றி ஆய்வு செய்யாத மாநகராட்சி ஊழியர்களை மதுரை உயர் நீதி மன்றம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகேந்திர பாண்டி என்பவர் திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், 4 காட்சிகளுக்கு பதிலாக 24 மணி நேரமும் காட்சிகளை திரையிடுவது போன்ற விதிமீறலில் திரையரங்குகள் ஈடுபடுவதாகவும் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

- Advertisement -
Viswasam-125cr

இந்த வழக்கின் விசாரணை கடந்த நவம்பர் 1 ஆம் தேதி நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக
புகார்கள் வந்தால், முறையாக விசாரித்து தியேட்டர்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் ஓடும் 22 தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு தியேட்டருக்கு 3 பேர் வீதம் வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள், வழக்கறிஞர்கள் ஆணையர்கள் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டனர்.

-விளம்பரம்-

ஆனால், இரண்டு திரையரங்களுக்கு மாநகராட்சி தரப்பில் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட 2 அலுவலர்களும் ஆய்வு மேற்கொள்ளாதது தெரியவந்தது. அவர்கள் இருவரும் நேரில் ஆஜரான நிலையில், இருவரையும் பணியிடைநீக்கம் செய்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மதுரை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement