‘இது லுங்கி இல்ல வேட்டி’ கலாச்சாரத்தையே இழிவுப்படுத்திட்டாங்க, சல்மான் கான் பாடலை வெளுத்து வாங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்

0
450
salman
- Advertisement -

கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையில் சல்மான் கான் பாடல் இருக்கிறது என்று கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் விமர்சித்திருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் சல்மான் கான். இவர் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பீவி ஹோ தோ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், இந்த படத்தில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு வெளிவந்த மைனே பியார் கியா என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக இவர் களமிறங்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் பெரிய அளவில் வெற்றி அடைந்து இருந்தது. இதனை தொடர்ந்து சல்மான் கான் பல படங்களில் நடித்து கலக்கியிருக்கிறார். மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சல்மான் கான் அவர்கள் இந்தி திரையுலகில் ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், இடையில் இவர் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டு மீண்டும் நடிக்க தொடங்கினார். மேலும், ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பல ஆண்டு காலமாக சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

- Advertisement -

சல்மான்கானின் திரைப்பயணம்:

அதேபோல் இவருடைய நடிப்பில் வெளி வந்திருந்த தபாங் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்து இருந்தது. அதை தொடர்ந்து இந்த படத்தின் மூன்று பாகங்கள் வெளியாகி இருந்தது. தற்போது தமிழில் அஜித் நடித்த வீரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்கிறார். இந்த ஹிந்தி ரீமேக்கை இயக்குனர் ஃபர்ஹாத் சம்ஜி இயக்குகிறார். இப்படத்திற்கு Kisi Ka Bhai Kisi Ki Jaan என்ற டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.

அஜித்தின் “வீரம்” ஹிந்தி ரீமேக் :

இந்த படம் ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.இவர்களுடன் இந்த படத்தில் ஜெகபதி பாபு, பூமிகா, மாளவிகா சர்மா, அபிமன்யூ சிங், சித்தார்த் நிகம் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு வி. மணிகண்டன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் இந்த படத்தில் இருந்து என்டம்மா என்ற பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடலில் சல்மான்கான், வெங்கடேஷ், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடனமாடியிருந்தார்கள். இந்த பாடலில் மூவருமே சட்டையுடன் காலில் ஷூ அணிந்துகொண்டு கோவிலில் நடனமாடிருந்தார்கள். தற்போது இந்த பாடலை கொச்சைப்படுத்தும் விதமாக நடனம் ஆகி இருப்பதாக சோசியல் மீடியாவில் சர்ச்சை எழுந்திருக்கிறது. அதிலும் தென்னிந்திய சினிமாவை சேர்ந்த ராம் சரண், வெங்கடேஷ் ஆகியோர் இதுபோன்ற கலாசார சீரழிவில் ஈடுபடுவதா என்று விமர்சித்து வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் பதிவு:

அதாவது, இந்த பாடலில் வேஷ்டி சட்டையில் மிகவும் கொச்சைப்படுத்துவது போலவும் தமிழ் கலாச்சாரத்தை இழிவு படுத்துவதாகவும் இருக்கிறது என்று பலரும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் கூறியது, தென்னிந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையில் இந்த செயல் இருக்கிறது. இது லுங்கி இல்லை வேஷ்டி. பெருமைக்குரிய உடையை. ஆனால், இந்த பாடலில் கேவலமான முறையில் காட்டப்பட்டிருக்கிறது. ஒரு கலாச்சாரத்தை இழிவுபடுத்துவதா? ஒரு கலாச்சார உடையை அருவருப்பான முறையில் காட்டப்படுவது வருத்தம் அளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement