முதன் முதலில் வெங்கட் பிரபு தான் என் Biopicஐ எடுக்க கேட்டார், அப்போது நான் – 800 பட சீக்ரெட் சொன்ன முரளிதரன்.

0
2161
- Advertisement -

என் வாழ்க்கைப் போராட்டம் தான் 800 படம் என்று முத்தையா முரளிதரன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் ஒன்று உருவாகி இருக்கிறது. பெரும் பொருட் செலவில் இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கி இருக்கிறார். இந்த படத்தை மூவி டிரையின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது. ஆனால், கொரோனா தொற்று காரணமாகவும், பல்வேறு சர்ச்சைகள் காரணமாகவும் இந்த படத்துக்கான பணிகள் தள்ளிக்கொண்டே போனது. பின்னர் இந்த படத்திற்கு ‘800’ என்று தலைப்பு வைக்கப்பட்டது.

-விளம்பரம்-

இதில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. அதற்கான போஸ்டரும் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் விஜய் சேதுபதி அச்சு அசலாக முத்தையா முரளிதரன் போன்றே காணப்பட்டார். ஆனால், இந்த படத்தின் மோஷன் போஸ்டருக்கே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. முத்தையா முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழர் என்றாலும் அவர் சிங்களர்களின் பக்கமே நிற்கக் கூடியவர். இதனால் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று பல்வேறு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். பின் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் விஜய் சேதுபதி. மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக மதுர் மிட்டல் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

800 படம்:

இவர் வேறு யாரும் இல்லை இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதை வாங்கிக்கொடுத்த ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மகிமா நம்பியார், நரேன், நாசர், வேலராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், யோக் ஜேபி, சரத் லோஹிதாஷ்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று இருக்கிறது.

முத்தையா முரளிதரன் அளித்த பேட்டி:

அதில் முத்தையா முரளிதரன், இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு முறை என்னுடைய வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அவர் நான் வாங்கிய கோப்பைகளை எல்லாம் பார்த்து உங்களைப் பற்றி ஒரு பயோபிக் எடுக்கலாமே என்று கேட்டிருந்தார். அப்போது எனக்கு அதில் விருப்பமில்லை. ஆனால், என்னுடைய மேனேஜர் இந்த படம் எடுத்து அதில் வரும் பணத்தை நற்குணம் மன்றத்திற்கு செலவழிக்கலாம் என்று எனக்கு ஐடியா கொடுத்தார். அதனால் தான் நானும் ஒப்புக்கொண்டேன். பின் இயக்குனர் ஸ்ரீபதியை என்னிடம் அனுப்பி படத்துக்கான கதையை எழுத சொல்லி இருந்தார். நான் அவரிடம் ஒன்றே ஒன்று தான் சொன்னேன். நீங்கள் கதையை எழுதும் போது எல்லோரிடமும் பேசுங்கள்.

-விளம்பரம்-

படத்தின் கதை உருவான விதம்:

என்னை பிடித்தவரும் இருக்கிறார்கள்,பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள். அனைவரிடமும் பேசுங்கள் என்று சொன்னேன். அதேபோல தான் அவரும் கதையை எழுதி இருக்கிறார். அதோடு வெங்கட் பிரபு தான் படத்தை இயக்குவதாக இருந்தது. தயாரிப்பாளருக்கும் அவருக்கும் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் அவர் விலகிக் கொண்டார். அதனால் ஸ்ரீபதியே இந்த படத்தை இயக்க சொன்னேன். பின் பல பிரச்சனைகள் வந்தது. அதன்பின் கொரோனா வந்தது. இப்படி பல பிரச்சனைகள் வந்தாலும் ஸ்ரீபதி விடாமுயற்சியால் தான் இந்த படம் இந்த இடத்திற்கு வந்திருக்கிறது.

படம் குறித்து சொன்னது:

என்னுடைய வாழ்க்கையில் இருந்த போராட்டத்தைப் போல தான் இந்த படத்துக்கும் நான் நிறைய போராடி இருக்கிறேன். எல்லாம் உண்மை சம்பவங்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படியே ஸ்ரீபதி கொண்டு வந்திருக்கிறார். இன்னும் நான் படம் பார்க்க வில்லை. கிரிக்கெட் படமாக இல்லாமல் 800 நான் சாதனை படைத்ததற்கு பின்னால் இருந்தது என்ன? என்ன மாதிரியான பிரச்சனைகளோடு விளையாடினேன்? என்னால் நாடு எந்த நிலைமைக்கு வந்தது குறித்து இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம். படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement