குக் வித் கோமாளி புகழுக்கு கறி விருந்து வைத்த இந்திய கிரிக்கெட் பிரபலம் – யார் பாருங்க ? வைரலாகும் புகைப்படம்

0
393
pugazh
- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் புகழ். இவர் கடலூரை சேர்ந்தவர். இவர் வெறும் ஐநூறு ரூபாயை வைத்துக் கொண்டு சென்னைக்கு வேலை தேடி வந்தார். முதலில் மெக்கானிக் கடையில் வேலை செய்த இவர் தொடர்ந்து பல கடையில் வேலை செய்து இருக்கிறார். பிறகு 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன் முதலாக புகழ் கலந்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

-விளம்பரம்-
pugal

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக வெங்கடேஷ் பத் மற்றும் தாமு உள்ளார்கள். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. அந்த வகையில் பலரையும் மகிழ்வித்து தனெக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்து இருப்பவர் புகழ். கடந்த இரண்டு சீசன்களிலும் புகழுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது.

- Advertisement -

புகழின் திரைப்பயணம்:

இவர் சபாபதி என்ற படத்தின் மூலம் தான் வெள்ளித்திரையில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அஸ்வின் நடிப்பில் வெளிவந்த என்ன சொல்ல போகிறாய் படத்தில் புகழ் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் ஹரிஹரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா என்று பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து புகழ் சமீபத்தில் அஜித்தின் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்திலும் ஒரு காட்சியில் நடித்து இருப்பார்.

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் புகழ்:

இது மட்டுமில்லாமல் அருண் விஜயின் யானை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற பல படங்களில் புகழ் நடித்து முடித்து உள்ளார். இதனிடையே விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த முறை போட்டியாளர்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் புகழ் வராதது ரசிகர்கள் பலருக்கும் வருத்தத்தை கொடுத்து இருந்தது.

-விளம்பரம்-

புகழுக்கு வைத்த கறி விருந்து:

பின் இரண்டாம் வாரத்திலிருந்து நிகழ்ச்சிக்கு புகழ் வந்ததையடுத்து நிகழ்ச்சியின் டிஆர்பியே எகிறியது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவருடைய காமெடியும், ஆக்ட்டிங்கும் மக்கள் மத்தியில் கவர்ந்துள்ளது. இந்த நிலையில் கிரிக்கெட் பிரபலம் ஒருவர் புகழுக்கு கரிவிருந்து வைத்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், புகழ் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் ஊர் சுற்றுவது வழக்கம். புகழ் மட்டும் இல்லைங்க, எல்லோரும் அதை தான் செய்கிறார்கள். அந்த வகையில் புகழ் சமீபத்தில் சேலம் சென்று இருக்கிறார்.

கறி விருந்து வைத்த கிரிக்கெட் பிரபலம்:

அப்போது புகழ் சேலத்தில் உள்ள கிரிக்கெட் பிரபலம் நடராஜனை சந்தித்திருக்கிறார். மேலும், நடராஜன் வீட்டில் புகழுக்கு செமத்தியான கறி விருந்து வைத்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோவை தான் புகழ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வைத்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் புகழ், கிரிக்கெட் பிரபலம் நடராஜன் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். தற்போது இதை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement