தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வரும் சடகோபன் ரமேஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜயின் நடனத்தை பற்றி புகழாரம் சூட்டியுள்ளார். பெரும்பாலும் நடனமென்றால் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா தான் என்று கூறுவார்கள், ஆனால் பிரபுதேவாவை கட்டிலில் விஜயின் நடனம் தான் சிறப்பாக உள்ளது என்று சடகோபன் ரமேஷ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசிய போது சினிமாவில் நடனம் என்று எடுத்துக் கொண்டால் தமக்கு இளைய தளபதி விஜய்யின் நடனம் தான் மிகவும் பிடிக்கும், இந்தியாவில் மிகச் சிறந்த நடனம் ஆடக்கூடியவர் ,எவ்வளவு கஷ்டமான நடன அசைவாக இருந்தாலும் அதை வெளியில் காட்டாமல் சாதாரணமாக ஆடுவார் விஜய் . உண்மையாக சொல்ல வேண்டுமானால் பிரபுதேவா நடனத்தை விட நான் விஜய் அவர்களின் நடனத்தை ரசித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.




