ஆசையாக எதிர்பார்த்த மகன் உயிரிழப்பு – வேதனையின் உச்சத்தில் இரங்கல் செய்தி வெளியிட்ட ரொனால்டோ. ஆறுதல் கூறும் ரசிகர்கள்.

0
379
ronaldo
- Advertisement -

கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகன் உயிரிழந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் மிகப் பிரபலமான கால்பந்து வீரராக திகழ்ந்தவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் போர்த்துக்கீச கால்பந்து அணியின் தலைவர் ஆவார். ஆரம்ப காலங்களில் இவர் அன்டோரின்கா என்ற கழகத்திற்காக விளையாடினார். பின் 1997ல் நிசியோனல் என்ற கழகத்திற்கு மாறினார். அதன் பின் ஸ்போர்ரின் சிபி என்ற கழகத்தில் விளையாடும் பொழுது இவருடைய வாழ்கை பயணம் மாறியது.

-விளம்பரம்-

அப்படியே படிப்படியாக முன்னேறி பல அணிகளில் விளையாடி வந்தார். மேலும், இவர் பல கால்பந்து வீரர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். தற்போது இவர் கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்று கால்பந்து அணியின் நிர்வாகியாக இருக்கிறார். இதனிடையே கிறிஸ்டியானோ ரொனால்டோ அவர்கள் ஜார்ஜியானா ரோட்ரிக்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கிரிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர், அலானா மார்டினா டோஸ் சாண்டோஸ் அவெரியோ,

- Advertisement -

கிறிஸ்டியானோ ரொனால்டோ குடும்பம்:

இவா மரியா டோஸ் சாண்டோஸ் மற்றும் மடியோ ரொனால்டோ என நான்கு குழந்தைகள் உள்ளனர். இதனை அடுத்து கடந்த ஆண்டு ஜார்ஜியானா ரோட்ரிக்ஸ் மீண்டும் கர்ப்பமாக இருந்தார். அதுமட்டும் இல்லாமல் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ரோட்ரிக்ஸ் தம்பதியினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தார்கள். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிவிட்ட பதிவு:

இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ரோட்ரிக்ஸ் தம்பதியினரின் மகன் இறந்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது குறித்து முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரின் மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் இருவரும் மன வேதனையுடன் சமூக வலைத்தளத்தில் பதிவு போட்டு இருக்கிறார்கள். அந்த பதிவில் அவர்கள் கூறியிருப்பது, எங்களுடைய அன்பு மகன் இறந்துவிட்டான் என்பதை கனத்த இதயத்துடன் பதிவு செய்கிறோம்.

-விளம்பரம்-

கிறிஸ்டியானோ ரொனால்டோ மகன் உயிரிழப்பு:

பெற்றோரால் ஏற்றுக்கொள்ள முடியாத வேதனை இது தான். எங்களது மகனை காப்பாற்ற போராடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. எங்களுடைய பெண் குழந்தை பிறப்பு எங்களுக்கு தற்போது ஆறுதலாக உள்ளது. இந்த இழப்பு எங்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த கொடுமையான காலகட்டத்தில் தனிமையை எதிர்பார்க்கிறோம். எங்களின் செல்ல மகன். நீ எப்போதும் எங்களின் ஏஞ்சல்.

இரங்கலை தெரிவிக்கும் ரசிகர்கள்:

நாங்கள் எப்போதும் உன்னை விரும்புவோம் என மன வேதனையுடன் பதிவிட்டு இருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ மகன் உயிரிழப்புக்கு கால்பந்து ரசிகர்கள் பலரும் தங்களின் சோகத்தை சமூக வலைதள பக்கங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். அதோடு பலரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தம்பதிக்கு ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement