12 நாட்கள் கழித்து சாத்தான்குளம் சம்பவம் குறித்து ட்வீட் போட்ட ரஜினி – பங்கமாக கலாய்த்த தமிழ் பட இருக்குனர்.

0
38999
cs
- Advertisement -

கோவில்பட்டியை அடுத்து உள்ள சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் இருவரின் மரணத்தால் தமிழகமே கொந்தளித்து போய் உள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் (59), அவரது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் (31) பழைய பேருந்து நிலையத்தில் ஏபிஜே செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்தார்கள். கடந்த 19 ஆம் தேதி ஜெயராஜ் அவர்கள் ஊரடங்கு உத்தரவு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடை திறந்து வைத்ததால் காவல் துறை அதிகாரிகள் கண்டித்தனர். பின் தந்தை,மகன் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸ் கடுமையாக தாக்கி உள்ளனர்.

-விளம்பரம்-

காவல்துறையினர் தாக்கியதில் இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டு அநியாயமாக உயிர் இழந்து உள்ளார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காட்டுத் தீயை விட வேகமாக கொழுந்து விட்டு எரிகிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்த சம்பவம் நடந்து 12 கழித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது” என்று கூறி #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டார்.

ரஜினி சொன்ன #சத்தியமா_விடவே_கூடாது என்ற வார்த்தை தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. இந்த நிலையில் ரஜினி செய்த இந்த ட்வீட்டை கேலி செய்யும் விதமாக தமிழ் பட இயக்குனர் சி எஸ் அமுதன் சமீபத்தில் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். ஆட்டோ ஷங்கர் தொடர்ச்சியாக பல்வேறு கொலைகளை செய்து வருவதை அறிந்து நான் மிகவும் துன்பமும் அதிர்ச்சியும் அடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்த சீரியல் கொலைகாரரான ஆட்டோ சங்கர் கடந்த 1995ஆம் ஆண்டே தற்கொலை செய்து கொண்டார். சாத்தான்குளம் சம்பவத்தில் ரஜினி தாமதமாக கருத்து தெரிவித்ததை கிண்டல் செய்யும் விதமாக தற்போது சிஎஸ் அமுதன் இப்படி ஒரு ட்வீட் செய்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டார்கள்.

Advertisement